இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: பிரபல இயக்குனரும்,  நடிகருமான பாரதிராஜா (வயது 79) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாரதிராஜா. கிராமத்து ராஜா என்று எல்லோரும் அழைக்கும் அளவிற்கு இவர் தொடர்ந்து தமிழ் மண்ணின் வாசனைகளை தமிழ்சினிமாவில் பரப்பி வந்தவர். தற்போது 79 வயதாகும் பாரதிராஜா சமீபகாலமாக படங்கள் இயக்குவதை தவிர்த்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். … Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் கஞ்சா எண்ணெயுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஜானி (25), லட்சுமணன் (28) என்பவரிடம் இருந்து போதைபொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பயங்கர கனவு.. ஆடு வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை வெட்டிய நபர்.. கானா நபரின் அதிர்ச்சி சம்பவம்

India oi-Nantha Kumar R அக்ரா: கானாவில் வீட்டில் தூங்கியபோது வந்த கனவால் ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை ஒருவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மனிதரும் தனது தூக்கத்தில் கனவு காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் நல்ல கனவு, கெட்ட கனவு என இருவகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். தங்களின் நன்மை பயக்கும் வகையில் வரும் கனவுகள் நல்ல கனவுகள் எனவும், தனக்கு அல்லது குடும்பத்தினருக்கு கெடுதல் நடக்கும் படியான கனவை தீய … Read more

NDTV பங்குகளை கைப்பற்றும் அதானி குழுமம்.. முகேஷ் அம்பானி உடன் போட்டி..!

டெல்லி: இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் அதானி குழுமம் மீடியா துறையில் இறங்குவதற்காகச் சில மாதங்களுக்கு முன்பு ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனத்தின் வாயிலாக முகேஷ் அம்பானியின் நெட்வொர்க் 18 உடன் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தைத் துவங்கி பெரிய அளவிலான கைப்பற்றல்களையோ அல்லது முதலீடுகளையோ செய்யாமல் இருந்த ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளது. கமிஷன் போர்-ஐ துவங்கிய ஜியோ.. முகேஷ் … Read more

How To: வீட்டிலேயே இயற்கையாக குங்குமம் தயாரிப்பது எப்படி? I How To Prepare Kumkum At Home?

பொதுவாக குங்குமத்தை கடைகளில் வாங்கியே பயன்படுத்துவோம். அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, நெற்றியில் அரிப்பு, அலர்ஜி என உண்டாக்கும். சிலருக்கு நெத்தியில் குங்குமம் வைக்கும் இடத்தில் சருமம் நிறம் மாறி தடம் விழுந்துவிடுவதும் உண்டு. இதுவே இயற்கை சார்ந்த பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே குங்குமம் தயாரித்து பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் சேலத்தை சேர்ந்த இயற்கை சார்ந்த உணவு மற்றும் வாழ்வியல் பொருள்களை தயாரிக்கும் திவ்யாபாரதி. திவ்யாபாரதி How to: காஸ் அடுப்பை … Read more

ரஷ்ய சிறையில் சித்திரவதை செய்யப்பட்டோம்., விடுவிக்கப்பட்ட உக்ரேனிய வீரர் குற்றச்சாட்டு

ரஷ்யர்கள் சிறையில் அட்டூழியங்கள் செய்ததாக விடுவிக்கப்பட்ட உக்ரேனிய வீரர்களில் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யா மீது ஏற்கனவே போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. போரில் காயமடைந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று உக்ரேனிய துருப்புக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது கடுமையான சித்திரவதை மற்றும் உளவியல் அழுத்தத்தை கொடுத்ததாக ரஷ்யர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள், தெற்கு துறைமுகமான மரியுபோலில் எஃகுத் தொழிற்சாலையிலிருந்து வாரக்கணக்கில் போராடிய ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்த வீரர்கள் ஆவர். அவர்கள் சமீபத்தில் … Read more

மதிய உணவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துங்கள்! தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: மதிய உணவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தாமல் ஏழை எளிய மாணவர்களின் வயிற்றில் அடிக்கிறது தமிழக அரசு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும்,  உணவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது பெருந்தலைவர் காமராஜரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட … Read more

அடுக்குமாடி குடியிறுப்புகளின் கட்டட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே விற்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அடுக்குமாடி குடியிறுப்புகளின் கட்டட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகளை விற்க வேண்டும். கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

ஊழல்.. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் அதிரடி

International oi-Jackson Singh கோலாலம்பூர்: பல கோடி ஊழல் முறைகேட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மலேசிய பிரதமராக கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகித்தவர் நஜீப் ரஸாக் (69). தனது ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) … Read more

ரஷ்யாவின் எதிர்பார்ப்பு.. இந்தியாவை வெறித்து பார்க்கும் மேற்கத்திய நாடுகள்.. ஏன் தெரியுமா?

இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக, ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு உக்ரைன் வெளியுறவுத் துறை, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய்-ஐ வாங்கவில்லை, உக்ரேனியர்களின் ரத்தினை வாங்குவதாக அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து ரஷ்யா பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது. இந்தியா உக்ரைனின் ரத்தத்தினை வாங்குகிறது.. ரஷ்யா எண்ணெய் குறித்து ஆவேசம்..! ரஷ்யாவின் எதிர்பார்ப்பு … Read more