ரெயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமாரின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு
புதுடெல்லி, ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருபவர் சதீஷ் குமார். அவருடைய பதவி காலம் 2025, ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு ஒரு வருட பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ரெயில்வே துறையில் 1988-ம் ஆண்டு மார்ச்சில் பணியை தொடங்கிய அவர், அத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறார். இதுபற்றி அரசு வெளியிட்ட உத்தரவில், சதீசுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கான ஒப்புதலை நியமனங்கள் குழு வழங்கியுள்ளது. … Read more