சென்னை – திருச்சி – மதுரைக்கு ஜாக்பாட்.. பாரத் பெட்ரோலியம் சொன்ன குட்நியூஸ்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வரும் நிலையில், எரிபொருள் விற்பனை நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அதிகரிக்கத் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது. தற்போது நாட்டின் முன்னணி பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் கார் விற்பனை 109% உயர்வு.. டெஸ்லா, டாடா-வின் நிலை என்ன தெரியுமா..?! எலக்டரிக் வாகனங்கள் … Read more

விற்பனைக்கு வந்த `புஷ்பா' சேலை; குஜராத் நபரின் ட்ரெண்டி ஐடியா!

நீலாம்பரி சேலை, ஓவியா ஹேர்கட் என பிரபலங்களின் உடைகளையும், ஆபரணங்களையும் தேடித் தேடிப் பின்பற்றுவதெற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு என சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருக்கிறது `புஷ்பா சேலை’. புஷ்பா `ஊ சொல்றியா’ சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா’வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது? `புஷ்பா’ படத்தில் அதிரடி நாயகனாக அல்லு அர்ஜுன் கலக்கி இருப்பார். வில்லனாக ஃபகத் பாசில், ராஷ்மிகாவின் நடிப்பு, வைரலான சமந்தா நடனமாடிய பாடல் என ஒரு … Read more

வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர். தமழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையின் 122-வது வார்டில் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர். Source link

மனைவி கிருத்திகா உடன் வந்து வாக்களித்தார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து  ஜனநாயக  கடமையை நிறைவேற்றினார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான … Read more

தமிழ் தாத்தா உ.வே.சா. தொண்டை போற்றுகிறேன்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்ப தாவது:- தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள், சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்…21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 சதவீதம்  வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் குறைந்த அளவாக தாம்பரத்தில் 6.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்திலேயே குறைந்த அளவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 10.65 சதவீதமும், அதிகளவாக அரியலூர் மாவட்டத்தில் 30.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரகசிய ஆவணம் கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி கைது| Dinamalar

புதுடில்லி : லஷ்கர் – இ – தொய்பா அமைப்பிற்கு, ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்த் திக்விஜய் நேகியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற, தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு, சிலர் உதவி வருவதாக கடந்த ஆண்டு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த நவம்பர் 6ல் வழக்குப் பதிவு செய்து, … Read more

குஜராத்: விற்பனையில் களைகட்டும் 'புஷ்பா' டிசைன் சேலை..!

காந்தி நகர், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடி்த்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது அந்த … Read more

கட்டணத்தை குறைக்க சொன்னது குத்தமா.. 1.94 லட்சம் கோடி நஷ்டம்.. சீன அரசின் கிடுக்குபிடி..!

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சீனாவில் பெரிய அளவில் அதிகரித்து வரும் மோனோபோலி தன்மையைக் குறைக்கக் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், டிஜிட்டல் சேவை துறை மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது சீன அரசு. உணவு டெலிவரி சேவை சீனாவில் உணவு டெலிவரி சேவை துறையில் பல நிறுவனங்கள் இருந்தாலும், மெய்துவான் (Meituan) என்னும் நிறுவனம் தான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் … Read more

நெல்லை: ஆர்வத்துடன் வாக்களித்த 101 வயது முதியவர்! – அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த பெருமிதம்!

நெல்லை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்து வருகின்றன. புதிதாக வாக்கு செலுத்தும் இளம் வாக்காளர்கள் ஒருபக்கம் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், மூத்த வாக்காளர்களும் அவர்களுக்கு இணையாக உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள். 80 வயது மூதாட்டி பீமா பீவி அந்த வகையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது … Read more