மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க ஜூலை 15ந்தேதி 10ஆயிரம் சிறப்பு முகாம்கள்! அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகைக்கு, இதுவரை விண்ணப்பிக்கதாதவர்கள், விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள்  விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ள  அமைச்சர் கீதாஜீவன், ஜூலை 15ந்தேதி  மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். அமைச்சர் கீதாஜீவன்,   தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 20 வகையான அமைப்புசாரா தொழிலாளர் … Read more

விமான விபத்து: விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்பட 270 பேர் பலியாகினர். விமானத்தில் இருந்த ஒரே ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பலியானவர்களின் மரபணுக்கள் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. … Read more

“விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆசை; இருந்தாலும்..!” – அதிமுக மாஃபா. பாண்டியராஜன்

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் கூறுகையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அதிமுக ஆட்சி காலத்தில் சிஏபி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இது அதிமுகவிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் தற்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தினால், அந்த அகழ்வாராய்ச்சி நடக்கும் இடங்களில் உள்ள உண்மைகள் வெளியில் வரும். மாஃபா.க.பாண்டியராஜன் `தமிழர் நாகரிகம்’ அதேபோல் … Read more

முனைவர் பட்டம் பெற்ற திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை : முனைவர் பட்டம் பெற்று, அதே கல்லூரியில்  உதவி பேராசிரியராக பணி வாய்ப்பு பெற்றுள்ள திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை முனைவர் என்.ஜென்சி, அந்த கல்லூரியின் ஆங்கில உதவி பேராசிரியராக நியனம் செய்யப்பட்டுள்ளார். இதை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின்  அந்த திருநங்கை ஜென்சிக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது   எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், … Read more

அதிர்ச்சி சம்பவம்.. 2 ஆண்டுகளாக சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்

ஐதராபாத், ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யா மாவட்டம் அச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. தலித் வகுப்பை சேர்ந்தவரான இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த அவர் தாயின் அரவணைப்பில் உள்ளார். இந்தநிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமியை அவருடைய தாய் அனுமதித்தார். அப்போது டாக்டர்கள் பரிசோதனையில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது … Read more

Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' – அமைச்சர் எதிர்ப்பு.. ABVP – SFI மாணவர்கள் மோதல்

கேரள ராஜ்பவனில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவிக்கொடி ஏந்தி காட்சியளிக்கும் பாரதமாதா படத்துக்கு மலர் தூவி வணங்கிய பின்னர் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தியை அழைத்து ராஜ்பவனில் பேசவைத்தனர். அந்த நிகழ்ச்சியில் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதமாதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அடுத்ததாக உலக சுற்றுச்சூழல் தினவிழாவை முன்னிட்டு கடந்த 5-ம் தேதி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் அலங்கரித்து … Read more

சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைய விருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் நடைபெறும் என்றும் கூறினார். சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் புதியதாக குழந்தைகளுக்கு என்று பிரத்யேக உயர் பன்னோக்கு மருத்துவமனை இடம் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. … Read more

மனைவி மீதான கோபம்.. மகள், மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை

நகரி, ஆந்திர மாநிலம் மயிலவரத்தை சேர்ந்தவர் ராஜா சங்கர். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு லட்சுமி ஹிரண்யா (வயது 9), லீலா சாயி (7) என ஒரு மகளும், மகனும் உள்ளனர். சந்திரிகா பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை வைத்து, மயிலவரத்தில் குழந்தைகளுடன் ராஜா சங்கர் வசித்து வந்தார். வெளிநாட்டில் உள்ள மனைவியின் நடத்தை மீது ரவிசங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தொலைபேசியில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மனைவி … Read more

Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to

‘தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன’ என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது. அவை… 1. தட்கல் டிக்கெட் 11 மணிக்கு திறந்த முதல் 10 நிமிடங்கள் பொதுமக்களுக்குத் தான் ஓப்பனாக இருக்கும். அந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளைப் புக் செய்ய முடியும். 2. ஜூலை 1-ம் தேதி முதல், தட்கல் டிக்கெட் புக் செய்யும் அனைவரும் … Read more

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ்  ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து  அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.  இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெட்ரோல், டீசல் எரிவாயு விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. எண்ணை வளங்களை கொண்ட ஈரான்மீது இஸ்ரோல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  அமெரிக்க ராணுவமும், , ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் … Read more