2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு; உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பியது….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. இந்த கொலிஜியத்தில்,   தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும்  மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர். இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், ஆகஸ்டு  25ந்தேதி … Read more

‘கொழுந்தியாளை விரும்புகிறேன்…’ திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் விநோத போராட்டம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக ராஜ் சக்சேனா குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் தனது மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் … Read more

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

2025 ஏதெர் எனர்ஜி கம்யூனிட்டி தினத்தில் பல்வேறு சுவாரஸ்யமான நுட்பங்கள், மேம்பாடுகள் மற்றும் EL01 கான்செப்ட், ரெட்க்ஸ் கான்செப்ட் ஆகியவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை வெளியிட்டுள்ள நிலையில், ஏதெர்ஸ்டேக் 7.0 மென்பொருள் மேம்பாடு, 6KW விரைவு சார்ஜர் அறிமுகம் செய்துள்ளது. ஏதெர் ஃபாஸ்ட் சார்ஜர் தற்பொழுது ஏதெர் 3300+ சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் கொண்டுள்ள நிலையில் தற்பொழுது 1 நிமிடத்திற்கு 1 கிமீ வேகத்தில் சார்ஜிங் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக கொண்டு வந்துள்ள 6 … Read more

Odum Kuthira Chaadum Kuthira Review: ஏமாற்றம் ஃபா ஃபா சேட்டா; சோதிக்கும் ஃபகத் பாசிலின் காமெடி படம்!

பர்னிச்சர் கடையில் பணிபுரியும் அபி (ஃபகத் ஃபாசில்) ஒரு நாள் தனது சகப் பணியாளருடன் பர்னிச்சர் பொருளை டெலிவர் செய்வதற்குக் கிளம்புகிறார். எதேச்சையாக அங்கு நிதியை (கல்யாணி ப்ரியதர்ஷன்) சந்திக்கிறார். அந்த சமயத்தில் நிதியின் காதல் வாழ்க்கையில் ஒரு பிரேக் ஏற்படுகிறது. பிறகு அபிக்கும் நிதிக்கும் காதல் மலர்கிறது. இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, ‘கல்யாண மாப்பிள்ளையாகக் குதிரையில் திருமண அரங்கிற்கு நீ வந்திறங்க வேண்டும்’ என்று … Read more

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி  ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more

2025 Ather 450 Apex Cruise control – ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை ஏதெர் 450 ஏபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக க்ரூஸ் கண்ட்ரோல் வரவுள்ள மாடல்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே 450 ஏபெக்ஸ் பயன்படுத்தி வருபவர்கள் OTA மூலம் அப்டேட் வழங்கப்படுகின்றது. இன்ஃபினைட் க்ரூஸ் என ஏதெர் எனர்ஜி பெயர் வைத்துள்ள நிலையில் CityCruise, Hill Control, மற்றும் Crawl Control என் மூன்று விதமான முறையில் வழங்குகின்றது. சிட்டி … Read more

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை – `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவே நிறைவேற்றி விட்டது. ஆனாலும் இவ்விவகாரத்தில் மராத்தா சமுதாயத்தினரை ஒ.பி.சி. பிரிவில் முழுமையாக சேர்க்கவேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். ஒ.பி.சி. பிரிவில் இருக்கும் கும்பி இனத்தவராக தங்களை அங்கீகரித்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீறாமல் … Read more

சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்லப்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில்  நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27ந்தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிறு – ஆகஸ்டு 31) … Read more

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

ஏதெர் எனர்ஜியின் EL பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் அடிப்படையில் EL01 என்ற கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் உற்பத்தி நிலை மாடல் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. Ather EL Platform ஏதெரின் EL பிளாட்ஃபார்ம் ஆனது 26 லட்சம் கிமீ டேட்டா கொண்டு உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் ஆக அமைந்திருப்பத்துடன், இதனை பயன்படுத்தி பல்வேறு மாடல்கள் மற்றும் மாறுபட்ட வடிவங்கள் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் … Read more

“காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' – CPM பெ.சண்முகம்

“சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் ‘நாட்டைக் காப்போம்’ அமைப்பு சார்பில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் சண்முகம் பேசும்போது, “மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சாதி கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளில் … Read more