தலைதெறித்து ஓடிய ரஷ்ய வீரர்…விடாமல் துரத்திய ஆளில்லா விமானம்: வைரல் வீடியோ!

ரஷ்ய ராணுவ படைவீரர் ஒருவர் உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காக தலைதெறிக்க ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷ்யா பின்னகர்த்தி கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்திவருகிறது. ரஷ்யாவின் இந்த பின்னகர்வு நடவடிக்கையை உக்ரைன் சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் தங்களது தடுப்பு தாக்குதல் உத்தியில் இருந்து … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,194,537 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,194,537 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 496,150,960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 431,829,882 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,458 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் தீவிர வறுமை ஒழிந்தது: சர்வதேச நிதியம்..| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,-இந்தியாவில் தீவிரமான வறுமை நிலை பெரும்பாலும் ஒழிந்து விட்டதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுனர்கள் சுர்ஜித் பல்லா, அரவிந்த் விர்மானி, கரன் பாசின் ஆகியோரின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்: கடந்த 2019ல் கொரோனா தாக்கத்திற்கு முன், இந்திய மக்கள் தொகையில், வாங்கும் சக்தி குறைவாக உள்ளோரின் எண்ணிக்கை, 0.8 சதவீதமாக இருந்தது. இவர்கள் தீவிர வறுமையில் உள்ளவர்களாக வகைபடுத்தப்பட்டவர்கள். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020லும் … Read more

கோவா விரைவில் முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாறும் – பிரமோத் சாவந்த்

பனாஜி,  கொரோனா போிடர் தொடங்கியதில் இருந்து மக்கள் முககவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகிறார்கள். சமீப நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் டெல்லி, மராட்டியம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் முககவசம் அணிவது கட்டயமில்லை என்ற உத்தரவுகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கோவா மாநிலத்திலும் முககவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவு வெளியாக உள்ளது. இதுகுறித்து கோவா மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த், நிருபர்களிடம் கூறுகையில், “கோவா மாநிலம் விரைவில் முக … Read more

ரஷ்யாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் மீது வண்ணப்பூச்சி ஊற்றி தாக்குதல்!

ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் ஆசிரியரும், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற டிமிட்ரி முரடோவ் வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றால் தாக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையான நோவயா கெஸெட்டாவின் ஆசிரியரும், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவருமான டிமிட்ரி முரடோவ் கடந்த 7ம் திகதி மொஸ்கோவ்வில் இருந்து சமாரா நோக்கி ரயிலில் சென்றபோது வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றை கொண்டு அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டெலிகிராம் … Read more

101 ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை; 3வது பட்டியல் வெளியிட்டார் அமைச்சர்| Dinamalar

புதுடில்லி-உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 101 வகையான ஆயுதங்கள், தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்பட்டு வந்தன. முன்னுரிமைமத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின், இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சில ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த, … Read more

மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை..!

மும்பை,  மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதனைத்தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அனில் தேஷ்முக் மற்றும் அவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே, நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ரூ.100 கோடி … Read more

கனடாவில் மான்களை அச்சுறுத்தும் ஜாம்பி வைரஸ்: மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!

கனடாவில் மான்களை தாக்கி அளித்து வரும் புதியவகை ஜாம்பி வைரஸ் நோய்யானது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கனடாவில் ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய பகுதிகளில் உள்ள மான்கள் கூட்டங்களை Chronic Wasting Disease (CWD) என்ற விசித்திரமான வைரஸ் தாக்கி அழித்துவருகிறது, இந்த வைரஸின் அறிகுறிகளை அடிப்படையாக கொண்டு இதனை மருத்துவ நிபுணர்கள் ஜாம்பி வைரஸ் என வகைப்படுத்தி அழைத்து வருகின்றனர். அதிகப்படியான உமிழ்நீர் வடிதல், செயல் … Read more

ராஜ்யசபாவில் 99 சதவீத அலுவல் நடந்ததாக மகிழ்ச்சி| Dinamalar

லோக்சபா மற்றும் ராஜ்யசபா திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதனால், பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த கூட்டத் தொடரில்,ராஜ்யசபாவில் 99 சதவீத அலுவல்கள் நடந்ததாக, அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜன., ௩௧ம் தேதி முதல், பிப்., ௧௧ வரை நடந்தது. பிப்., ௧ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, கடந்த மாதம் ௧௪ல் துவங்கியது. ஏப்., ௮ வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. புதிய மசோதாக்கள்இந்நிலையில், … Read more

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

புதுடெல்லி, தமிழக கவர்னர் ஆர்என் ரவி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன்பின் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது டெல்லி சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய மந்திரிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.