பொறியியல் நேரடி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுவதால்,  இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைஅறிவித்துள்ளது.தொலைதூர கல்வி மாணவர்களுக்கு நாளை (20ம் தேதி) நேரடியாக நடைபெற இருந்த தேர்வு மார்ச் 9ம் தேதியும், வருகிற 21ம் தேதி நடக்க இருந்த தேர்வு மார்ச் 10ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கு வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களில் இல்லாத மோசமான நிலை.. ஆனா ஐடி துறையினருக்கு ஜாக்பாட் தான்..!

நாட்டில் 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அட்ரிஷன் விகிதமானது உச்சம் தொட்டுள்ளது. இது கிரேட் ரிசைக்னேஷன் காலம் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஊழியர்கள் கையில் இருக்கும் வேலைகளை விடுத்து, சிறப்பான வாய்ப்புகள் கிடைத்தால் மாறியும் வருகின்றனர். இதற்கிடையில் தான் நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமானது 2020ல் 12.8 சதவீதமாக இருந்தது. இது 2021ல் 21% ஆக அதிகரித்துள்ளது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! முந்தைய 3 காலாண்டு நிலவரம் இப்படி ஒரு சவாலான நிலைக்கு மத்தியில் … Read more

சுவிட்சர்லாந்தில் இனி இதற்கு கூடுதல் கட்டணம் வசூல்!

சுவிட்சர்லாந்தில் இனிவரும் நாட்களில் ரீப்ளே டிவிக்கு (replay TV) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ரீப்ளே டிவி என்பது நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, பயனர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அவற்றைப் பார்க்க அனுமதிக்கிறது, அதிலும் சப்ஸ்கிரைபர்களிடமிருந்து எந்தஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த ரீப்ளே டிவியில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது பார்வையாளர்களை நிகழ்ச்சிக்கு இடையே வரும் விளம்பரங்களை வேகமாக ஓட்டிவிட்டு இகழச்சியை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது. இது ஒளிபரப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் … Read more

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் துணை ராணுவ படையினர் தேவையில்லை என்றும் … Read more

மேற்கு வங்காள ஆளுநரை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில், மேற்கு வங்காள ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஆளுநர் ஜக்தீப் தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவர் பா.ஜ.க.வின் குரலாக பேசி வருகிறார். இதனால் ஜக்தீப் தங்கரை … Read more

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில், மாசி மக தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள  ஏரிகாத்த ராமர் என்கிற கோதண்டராமர் கோயில் மாசி மகம் தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையாட்டி, மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கருணாகர பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார். அதில், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து … Read more

தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..!

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகச் சந்தைக்கு ஏற்ப இல்லை, இதற்கு இந்தியாவும், சீனாவும் முக்கியக் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அது தான் உண்மை. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு, ரஷ்ய உக்ரைன் பிரச்சனை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1900 டாலரை தாண்டியுள்ளது. … Read more

உக்ரைன் நகரை உலுக்கிய கார் வெடிகுண்டு தாக்குதல்! மக்கள் வெளியேற்றம்.. ரஷ்யாவின் சதித்திட்டம்?

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள Donetsk நகரத்தில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதலின் தொடக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரஷ்ய படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரங்களான Donetsk மற்றும் Luhansk-ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு, அதனை ஆளும் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டனர். மக்களை அங்கிருந்து வெளியேறி எல்லையைக் கடந்து ரஷ்யாவிற்குள் நுழையுமாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், … Read more

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில் கற்பித்த கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், வகுப்புகளை நடத்தும் போது ஹிஜாபை அகற்றுமாறு கல்லூரி கூறியதை அடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், தன்னை சாந்தினி என்று அடையாளம் காட்டிய விரிவுரையாளர், “நான் ஜெயின் பியூ கல்லூரியில் மூன்று … Read more