புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி

பெங்களூரு: 8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில்  32-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி லீக் புள்ளி பட்டியலில்  2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில்  யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் 37-27 … Read more

கெத்தாக வந்த நீதா அம்பானி.. கோபமாக வெளியேறினாராம்.. ஏன் தெரியுமா..?!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் துவங்கியுள்ளது, மிகப்பெரிய வர்த்தகக் கனவுகள் உடன் 10 அணிகள் உடன் ஐபிஎல் 2022க்கான ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூரில் துவங்கியது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டபோது, கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் வழக்கம் போல் இந்த ஐபிஎல் ஏலத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர். குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைவருமான நீதா அம்பானியை கலாய்த்து … Read more

`ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை!' – பிரசாரத்தில் பிரதமர் மோடி

பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில், பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி,“100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார நெருக்கடியான, கொரோனா தொற்றை எதிர்கொண்டபோதிலும், பாஜக அரசாங்கம் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. பெருந்தொற்றுக் காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை. மோடி – ராகுல் காந்தி கொரோனா காலத்தில் தடுப்பூசிக்கு … Read more

பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில் பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட விருந்து விழாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்வில் நால்வர் துப்பாக்கி குண்டு காயங்களுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவலில், பத்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர்கள் இதுவரை சிக்கவில்லை என்றே தெரிய வருகிறது. இதனிடையே, துப்பாக்கி குண்டுகளுக்கு … Read more

திமுக – பாஜக – திமுக: மீண்டும் திமுகவுக்கு தாவினார் ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம்…

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம். மீண்டும் திமுகவுக்கு தாவினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த 2020ம் ஆண்டு, திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது சர்ச்சையானது. இதையடுத்து, அவரிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த கு.க.செல்வம், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை … Read more

ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ள வீரர்கள் விவரம்

பெங்களூர்: ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. தீபக் சாஹர் – ரூ. 14 கோடி அம்பதி ராயுடு – ரூ. 6.75 கோடி டிவைன் … Read more

கல்வி, சுகாதார துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு…அதிகரிக்குமா? கூடுதல் வரி நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை| Dinamalar

நாட்டில் பல ஆண்டுகளாக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோரிடம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. இது எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறதோ அதை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை தான் உள்ளது. கடந்த 2007 – 08ம் நிதியாண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்காக, 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் கல்விக்கான கூடுதல் வரி, 3 சதவீதமாக உயர்ந்தது. இந்த கூடுதல் வரி மூலம் வசூலான தொகையில், … Read more

லைசென்ஸ் ராஜ் திட்டத்தை எதிர்த்த ராகுல் பஜாஜ்.. யாருக்கும் அஞ்சாத தொழிலதிபர்..!

இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பல தனியார் நிறுவனங்கள் களமிறங்கிய நிலையில் மிகவும் சில நிறுவனங்களால் மட்டுமே இதுநாள் வரையில் பயணிக்க முடிந்தது. இந்த 75 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் லைசென்ஸ் ராஜ், தாராளமயமாக்கல் எனப் பல மாற்றங்கள் வந்த போதும் அசராமல் தொடர்ந்தும் ஆதிக்கம் செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று பஜாஜ் ஆட்டோ. பஜாஜ் ஆட்டோ என்னும் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராகுல் பஜாஜ் இன்று தனது 83 … Read more

`சேர்லாம் இருக்கு; ஆனா, உக்கார்ந்தா எங்க வேலை இருக்காது!' – நாற்காலி சட்டமும் நடைமுறையும்

அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்கள் உட்காருவதற்கு கட்டாயம் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா 2021 செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 13-ம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமலில் உள்ளதா, உண்மையிலேயே ஊழியர்களுக்குப் பணியிடங்களில் நாற்காலி போடப்பட்டுள்ளதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். Representational Image பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் ஆண் … Read more