அமைச்சர் நேருவின் ரூ.888 கோடி ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.888 கோடி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி  திராவிட மாடல் அரசு என கூறிக்கொள்ளும் திமுக அரசு,  விசாரணைக்கு அஞ்சி தப்பி ஓடுவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. … Read more

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ பஸ் அறிமுகமானது | Automobile Tamilan

இந்தியாவில் நீண்ட தூர நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ ஹெவி டியூட்டி பஸ் சேஸிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும் என DICV நிறுவனம் தெரிவித்துள்ளது. 19,500 கிலோ (19.5 டன்) மொத்த வாகன எடை (GVW) கொண்டதாக  அறிமுகம் செய்யப்பட்டுள்ள BB1924 அதிகப்படியான பயணிகளையும் (51+1+1), அவர்களின் உடைமைகளையும் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரத் பென்ஸ் BB1924 இந்த ஹெவி … Read more

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

“பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சில மாதங்களுக்கு முன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டத்தைப் பெறாமல் துணைவேந்தர் மூலம் பட்டம் பெற்றார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற ஆராய்ச்சி மாணவி. இந்தச் … Read more

திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்! மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான   மு.க. ஸ்டாலின்  கூறினார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.8ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்,  முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றது. இதில்,   ‘என் … Read more

ஓபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… அரசியல் பரபரப்பு…

கோவை: கோவையில்   நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்பட சில தலைவர்கள், தவெக, திமுக என மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்‘ கூறிய  செங்கோட்டையனை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையில், நீக்கிய நிலையில், … Read more

"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப்

‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” பாலிவுட் மட்டுமின்றி மற்ற சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள். ‘த்ரிஷ்யம்’ அப்படி நடித்தால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக நான் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புகிறேன். ஹீரோக்கள் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் … Read more

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் பலி: இது கொலை என குற்றம் சாட்டுகிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி…

டெல்லி: கோவா கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது விபத்து அல்ல   கொலை என எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான  ராகுல்காந்தி. குற்றம் சாட்டி  உள்ளார். கோவா தீ விபத்து விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவா மாநில அரசை கடுமையாக சாடி உள்ள ராகுல்காந்தி,  இதற்கு காரணம் மாநில பாஜக அரசு என்றும், இது விபத்து … Read more

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" – எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, “ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய்யான தகவல்களை தயாரித்து வந்துள்ளனர். பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை. பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. விரைவில் மாம்பழம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் … Read more

தேசிய நீர் விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் மாவட்ட ஆட்சியர்கள்!

சென்னை: தேசிய நீர் விருதுகளை   பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் விருதுகளை  காண்பித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., … Read more