கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம், கேரளாவில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பஞ்சாயத்து அடிப்படையில் ஒரு வாக்காளர் கிராம, ஊராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து என 3 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் … Read more

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" – கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது. Ind vs SA இந்நிலையில் … Read more

2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”! பரிந்துரைகள் வரவேற்பு…

சென்னை:  2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படு வதாக சென்னை  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  வளியிட்டு உள்ளது. 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் … Read more

புதுவையில் விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்: தொண்டர்கள் முண்டியடிப்பு

புதுவை, புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்குள் மற்றும் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் … Read more

நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?

நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார். சரவணபாபு இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும … Read more

சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறுகிறது என கல்வி அமைச்சர்  அன்பில் மகேஷ் அறிவிததுள்ளார்.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த கண்காட்சி 2026ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தொடங்குகிறது.  பபாசியின்  49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 7 முதல் 19 வரை (13 நாட்கள்) நந்தனம் YMCA திடலில் நடைபெறுகிறது. இந்த புத்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. … Read more

புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

புதுவை, கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கியூஆா் குறியீடு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இதன்படி, பொதுக்கூட்டத்திற்கு வரும் தவெக நிர்வாகிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த … Read more

மறைந்த கணவர் தர்மேந்திராவிற்கு டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டம் – ஹேமமாலினி

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாத இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தனது 89வது வயதில் காலமான நிலையில் தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் இணைந்து கடந்த மாதம் 27ம் தேதி மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் ஹேமமாலினியோ அல்லது அவரது மகள்களோ கலந்து கொள்ளவில்லை. தர்மேந்திராவின் பிரார்த்தனை கூட்டதில் கலந்துகொண்டவர்கள் ஹேமமாலினியின் … Read more

சுயவேலைவாய்ப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சுயவேலைவாய்ப்பு தொடர்பாக ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்கிறது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதுடன், … Read more

மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம்

புதுடெல்லி, வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அனைத்து பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகளும் ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு’ (உமீது) போர்ட்டலில் 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. இந்த போர்ட்டல் கடந்த ஜூன் 6-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 6-ந்தேதி வரை சொத்து பதிவேற்றத்துக்கு காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அரசும், சுப்ரீம் கோர்ட்டும் திட்டவட்டமாக தெரிவித்தன. தற்போது … Read more