தலைப்பு செய்திகள்
இன்று முதல் 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய டிரம்ப் தடை உத்தரவு
வாஷிக்டன் இன்று முதல் 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம் உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், புருண்டி, … Read more
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan
டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஆம் ஆண்டிற்கான OBD2B ஆதரவினை பெற்ற அப்பாச்சி RTR 200 4V விலை ரூ. 1,53,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பாச்சி பிராண்டினை டிவிஎஸ் வெளியிட்டு வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்து சுமார் 60 லட்சம் பைக்குகளுக்கு கூடுதலாக விற்றுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் தொடர்ந்து புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட ஓபிடி-2பி ஆதரவுடன் கூடிய 9,000 rpm-ல் 20.8 PS பவர் மற்றும் 7,250 rpm-ல் … Read more
Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" – குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர். அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். 10 நாள் கழிந்த நிலையில் நிலையில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மேகாலயாவில் மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் உடல் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா போலீஸார் சோனத்தைத் தேடிக்கொண்டிருந்த நிலையில் … Read more
இன்று தங்கம் விலை மேலும் சரிவு
சென்னை இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று … Read more
கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது. தீ பிடித்த சரக்கு கப்பலிலிருந்து சுமார் 22 பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை இறங்கியுள்ளது. 650க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் உடன் கொழும்பிலிருந்து மும்பை நோக்கி இந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்ததாக கடலோர காவல் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் அடையாளம் காணப்பட்ட அந்த கப்பலில் இருந்து 20 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக … Read more
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புது ஜோடி… கணவரை கொன்றதாக மனைவி கைது…
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதேவேளையில், மத்திய பிரதேச மாநில இந்தூரில் இருந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதியர் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது. சோனம் மற்றும் ராஜா … Read more
நயன்தாரா – விக்னேஷ் சிவன்: "என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்" – திருமண நாள் பகிர்வு!
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமண நாள் ஸ்பெஷலாக கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்களை நெகிழ்ச்சியான வரிகளுடன் பகிர்ந்துள்ளார் நயன்தாரா. அந்த கேப்ஷன்… “எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை ♥️ என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்.. நாம் இருவரில் இருந்து நான்கு பேராக இருக்கிறோம், வேறு என்ன வேண்டும்… காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்குக் காட்டினீர்கள்! … Read more
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்…
சென்னை: தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை என கடுமையாக சென்னை உயர்நீதிமன்றம் புலன்விசாரணை அதிகாரிகளை பந்தோபஸ்து பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று மாநகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் whatsapp குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது … Read more
அமோக ஆதரவுடன் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஏதெர் ரிஸ்டா | Automobile Tamilan
பிரபலமான மின்சார இரு சக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏதெர் எனர்ஜி தொடர்ந்து சீரான விற்பனை மற்றும் வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வருடங்கள் கூட நிறைவடையாத புதிய ரிஸ்டா குடும்பங்களுக்கான ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கடந்த 12 மாதங்களாக 60% சந்தை பங்களிப்பை ரிஸ்டா மூலம் இந்நிறுவனம் ஆனது பெற்று வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஏதர் எனர்ஜியின் … Read more