போர்டு எக்ஸாம் வருதுன்னு பயமா இருக்கா? கவலை விடுங்க… இதோ CBSE-யின் சூப்பர் சேவை!
CBSE Board Exam 2026: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டாலே பல மாணவர்களுக்கு ‘தேர்வு பயம்’ தொற்றிக்கொள்வது இயல்புதான். ‘எப்படிப் படிக்கப் போகிறோம்?’, ‘நேரம் போதுமா?’ என்ற பதற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தியாக CBSE வாரியம் அதிரடி மனநல ஆலோசனை சேவையைத் தொடங்கியுள்ளது.