தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

புதுடெல்லி: தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரையில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை … Read more

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் பதவிக் காலத்தை வரும் ஜூன் 30 வரை நீட்டித்து நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் முக்கியப் பதவிகளுக்கான நியமனங்களை முடிவு செய்யும் இந்தக் குழுவானது எடுத்துள்ள அரிதான முடிவு என அறியப்படுகிறது. முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி ஜி.ஜி.பீவூருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து இந்திரா காந்தி அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் தற்போது மனோஜ் பாண்டே பதவிக் காலம் … Read more

பிரஜ்வல் பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: அமைச்சர் ஜி.பரமேஸ்வரா

பெங்களூரு: “பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரிய எங்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இன்று தெரிவித்தார். மஜதவின் ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்கு பாலியல் துன்புறத்தல் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி மாநில அரசிடமிருந்து மே 21-ம் தேதி தான் கோரிக்கை வந்தது என்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

“எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது” – பிரதமர் மோடி பேச்சு @ உத்தரப் பிரதேசம்

மிர்சாபூர்(உத்தரப் பிரதேசம்): “எனது சிறுவயதில் பாத்திரம் கழுவியும் தேநீர் பரிமாறியுமே வளர்ந்தேன். எனக்கும் தேநீருக்குமானஉறவு மிகவும் ஆழமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சமாஜ்வாதி கட்சிக்காக யாரும் தங்களின் வாக்குகளை வீணடிக்க விரும்ப மாட்டார்கள். வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யார் ஆட்சியமைக்க இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சாமானியர்கள் வாக்களிப்பார்கள். இண்டியா கூட்டணியினர் … Read more

ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து: குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை 

காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளை (மே 27) உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அப்போது மாநிலங்களில் உள்ள விளையாட்டு மையங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது … Read more

58 மக்களவை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட தேர்தலில் 59% வாக்குப்பதிவு

புதுடெல்லி: ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி 428 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் … Read more

ஓட்டு வங்கிக்காக பணியாற்றுகிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி

பிஹரார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்கள்வை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக எம்.பி ராம் கிர்பல் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சமூக நீதி போராட்டத்துக்கான புதிய வழியை காட்டிய மாநிலம் பிஹார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் உரிமைகளை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் இண்டியா கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பேன் என நான் இங்கிருந்து கூற விரும்புகிறேன். … Read more

குஜராத் – ராஜ்கோட் தீ விபத்து பலி 33 ஆக அதிகரிப்பு: நடந்தது என்ன?

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்னிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதில், 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது போக்கு மையம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் நேற்று ஏராளமான சிறுவர், சிறுமியர் குவிந்திருந்தனர். மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக … Read more

டெல்லியில் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளங் குழந்தைகள் பலி

புதுடெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது: “இரவு 11.30 மணியளவில் எங்களுக்கு விவேக் விஹார் பகுதியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் … Read more

வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களை கொண்டு மணல் சிற்பம்

பூரி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களைக் கொண்டு மணற் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ‘உங்கள் வாக்கு உங்கள் குரல்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது … Read more