கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவும், மத்திய பாஜக அரசை காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன. கர்நாடகாவில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டின் இப்போது வரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில், 825 விவசாயிகள் விவசாயக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 138 பேர் வேறு காரணங்களுக்காக … Read more

இந்து கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் நிகழ்வாக, இந்துக்கள் கோயில் கட்ட நிலத்தை தானமாக இஸ்லாமியர்கள் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் அலிநகர் உள்ளது. அங்கு தப்ரி கிராமத்தில் உள்ள சக்லைன் ஹைதர் என்ற இஸ்லாமியர் தம் உறவினரான அக்தர் அன்சாரிக்கு 1,364 சதுர அடி நிலத்தை தானமாக அளித்தார். இதில் அக்தர் தனக்காக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இந்தச் … Read more

ஆபரேஷன் மகாதேவ்: 14 நாள்கள் போட்ட திட்டம்… யார் இந்த பயங்கரவாதி ஹாஷிம் மூசா?

Operation Mahadev: பகல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசா சுட்டுக்கொல்லப்பட்ட இந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது என்பது குறித்து இங்கு காணலாம்.

‘ஆபத்தானது, தொந்தரவானது’ – நாய்க்கடி சம்பவங்கள் குறித்து தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை

புது டெல்லி: தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு, ரேபிஸ் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் இந்த நிலைமையை ஆபத்தானது என்றும், தொந்தரவானது என்றும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி ஆறு வயது சிறுமியின் துயர மரணம் குறித்து வெளியான ஊடக செய்திகள அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை … Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: மோடி – டிரம்ப் பேசவே இல்லை… ஜெய்சங்கர் பளீச்!

Operation Sindhoor: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் சோதனை நிறைவு: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி என்விஎன் சோமு நாடாளுமன்றத்தில் 3 கேள்விகளை எழுப்பி இருந்தார். 1. நாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மையா? 2. உள்நாட்டு மற்றும் சர்வதேச … Read more

சாதாரணமாக நடந்து சென்று..திடீரென மாடியில் இருந்து குதித்த மாணவி! பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Ahmedabad Student Death CCTV Footage : பள்ளி மாணவி ஒருவர், 4வது மாடியில் இருந்து எகிறி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்கிறது.  

பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? – மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார். மக்களவை இன்று தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளின் அமளியால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். மக்களவையில் பேசிய அவர், “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த … Read more

“பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?” – ப.சிதம்பரம் கேள்வியால் சர்ச்சை

புதுடெல்லி: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், ஓர் ஊடகப் பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ஏன் நீங்கள்(அரசு) அவர்களைக் கைது செய்யவில்லை? ஏன் நீங்கள் அவர்களை அடையாளம் காணவில்லை? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 அல்லது … Read more

விபத்தில் இறந்த பெண்..வரதட்சணை திரும்ப கேட்ட உறவினர்கள்! வைரல் செய்தி

Telangana Relatives Seek Dowry Back : பெண் ஒருவர், திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்டு பாேராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.