டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்தது அமலாக்கத் துறை!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலிடம் மார்ச் 28-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் … Read more

பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கியது பூடான் அரசு!

திம்பு: பூடானின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் இந்த விருதை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பூடான் சென்றார். பாரோ விமான நிலையத்தில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி பார்வையிடும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பூடானின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் த ட்ரக் கிளைல்போ பிரதமர் நரேந்திர மோடிக்கு … Read more

கைகூடாத பிஜு ஜனதா தளம் கூட்டணி: ஒடிசாவில் பாஜக தனித்துப் போட்டி!

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாஜக தனித்தே போட்டியிட இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமால் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிஜு ஜனதா தளம் உடனான கூட்டணி கைகூடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஒடிசாவை உருவாக்க, ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. ஒடிசாவின் நான்கரை கோடி மக்களின் … Read more

கேஜ்ரிவால் கைது: இண்டியா கூட்டணி தேர்தல் ஆணையத்திடம் முறையிடும்- மம்தா

கொல்கத்தா: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கும் நோக்கில், சுனிதா கேஜ்ரிவாலிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதேநேரத்தில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றால் குற்றம் சாட்டப்பட்ட … Read more

ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்: சாலைகள் மூடலால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக பல சாலைகளை போலீஸார் மூடியதால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் ஐடிஒ சவுக், ராஜ் கட் மற்றும் விகாஸ் மார்க் சாலைகளை இன்று காலையில் … Read more

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கேஜ்ரிவால் வாபஸ்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாபஸ் பெற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள், “வழிமுறைகளின் படி கேஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தினை அணுக உள்ளார். அதேபோல், அமலாக்கத் துறையின் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் ஆஜர்படுத்தப்படுவார்” என்று தெரிவித்தனர். டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த வாரம் கைது … Read more

கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அன்னா ஹசாரே

அகமதுநகர்(மகாராஷ்டிரா): டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “அரவிந்த் கேஜ்ரிவாலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். மதுவுக்கு எதிராக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்; குரல் கொடுத்தவர். தற்போது அவர் மதுபான கொள்கைகளை வகுத்து வருகிறார். கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்” என தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே இயக்கத்தில் கேஜ்ரிவால்: கடந்த 2011ம் … Read more

கைதுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால்.. ஆம் ஆமி போராட்டம்.. மெட்ரோ நிலையம் மூடல்..

Aam Aadmi Protest: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மியின் மாபெரும் போராட்டம். டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

கேஜ்ரிவால் கைது | டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம் தீவிரம்; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் … Read more

70 ஆண்டுகளுக்கு முன்பு 14 ஆக இருந்த தேசிய கட்சிகள் எண்ணிக்கை 6 ஆக சரிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை 14. இப்போது சுமார் 2,500 அரசியல் கட்சிகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளில் தேசிய … Read more