5-ம் கட்ட மக்களவை தேர்தல்: மாயாவதி முதல் அம்பானி வரை வாக்களித்த பிரபலங்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ஜோயா அக்தார், ஃபர்ஹான் அக்தார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்தனர். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நடிகர் அக்‌ஷய் குமார், நான் எனது இந்தியா வலிமையானதாக, வளர்ச்சியடைய … Read more

நாட்டுத் துப்பாக்கிகள் தயாரான உ.பி.யில் பீரங்கி குண்டுகள் தயாராகின்றன: அமித் ஷா பெருமிதம்

லலித்பூர்: ஒரு காலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட உ.பியில் இன்று பீரங்கி குண்டுகள் தயாராகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பி. அனுராக் சர்மா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லலித்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகவும் ஆன பிறகுதான் உ.பி. வளர்ச்சி அடையத் தொடங்கியது. … Read more

ஜோன்பூர் அத்தலா மசூதி ஒரு கோயிலாக இருந்தது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் சொத்தாக உள்ளது. இந்நிலையில் இந்த மசூதி முன்பு கோயிலாக இருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ரா மற்றும் மதுராவில் இதுபோன்ற வழக்குகளால் பிரபலமான வழக்கறிஞர் அஜய் பிரதாப்சிங், இந்த வழக்கையும் தொடுத்துள்ளார். ஜோன்பூரின் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இதற்கான மனு … Read more

12 ஆண்டுக்கு முன்பு நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள்: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் போராடினோம், இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் உள்ள முதல்வர் கேஜ்ரிவாலின் இல்லத்துக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி சென்றார். அங்கு கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை கொடூரமாக தாக்கியதாக டெல்லி போலீஸில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார். உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்: அதன் அடிப்படையில் பிபவ் குமாரை் டெல்லி … Read more

அரசியல் சாசனம் இல்லையென்றால் மக்களின் உரிமைகள் பறிபோகும்: ராகுல் காந்தி ஆவேசம்

அமேதி: நாட்டில் அரசியல் சாசனம் இல்லையென்றால் மக்களின் உரிமைகள் பறிபோகும் என உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கிஷோரி லால் சர்மாவுக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து … Read more

நாட்டில் உள்ள இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: நம் நாட்டில் உள்ள இளைஞர்களை, கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உடியனுர் தேவி கோயிலில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சோம்நாத்துக்கு, முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர் வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட பின்னர் சோம்நாத் பேசியதாவது: கோயில் என்பது முதியோர்கள் வந்து கடவுளின் … Read more

சமூக வலைதளம் மூலம் பாஜகவை விமர்சிக்கும் லாலு!

ஒரு காலத்தில் ஐடி துறையை கிண்டலாக பேசிய பிஹார் முன்னாள் முதல்வர் லாலு தற்போது, தனது அரசியல் செயல்பாட்டுக்கு சமூக வலைதளத்தையே பிரதானமாக சார்ந்து உள்ளார். உடல்நலம் காரணமாக லாலு முன்பு போல் வெளியே செல்வதில்லை. அவருடைய மகள் ரோஹிணி ஆச்சார்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மட்டுமே அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மற்றபடி, அவரது அரசியல் செயல்பாடுகள் எல்லாம் சமூக வலைதளம் மூலமாகத்தான் நிகழ்கின்றன. பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து லாலு இடும் பதிவுகள் … Read more

“பிரிவினையை தூண்டுகிறார் மோடி” – கார்கே குற்றச்சாட்டு

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள், நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கார்கே கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். காங்கிரஸ், சமாஜ் வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டு கிறார். நாங்கள் இதுவரை புல்டோசர்களை பயன்படுத்தியது கிடையாது. பிரதமர் மோடியின் கருத்துகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் … Read more

வடக்கு Vs தெற்கு… பிளவுவாதம் பேசுகிறாரா மோடி? – ‘மாறும்’ பாஜக தேர்தல் வியூகம்

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5-வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வட மாநிலங்களில் மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உத்தரப் பிரதேச மக்களை இழிவாகப் பேசுகின்றனர். இதை நாம் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது” எனப் பேசினார். இது பெரும் … Read more

பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்… ஷாக் வீடியோ

Lok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.