“ஆபரேஷன் சிந்தூரின்போது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டது” – மக்களவையில் ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டுள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் பேசியது: “ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படுவதற்கு முன்பே, நமது பாதுகாப்புப் படைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசுடனும் பாறையைப் போல் உறுதியாக நிற்போம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதி அளித்தன. நான் எந்த ராணுவ வீரருடன் கைகுலுக்கும்போதும் அவரை நாட்டுக்காக போராட … Read more

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்கள் இப்போது வரை ஐசியுவில் உள்ளன” என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்தது கொடுமையின் உச்சம். … Read more

மகளிர் உதவித்தொகை: பெண்கள் போல நாடகமாடி பணம் பெற்ற 14,000 ஆண்கள்! விவரம் என்ன?

Maharashtra Ladki Bahin Yojana Scam : மகாராஷ்டிராவில் பெண்கள் பெயரில் பல ஆயிரம் ஆண்கள் அரசின் உதவித்தாெகையை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ.  

“இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்” என்று மக்களவையில் … Read more

'உலகின் எந்த தலைவரும் இந்தியாவின் தாக்குதலை நிறுத்த சொல்லவில்லை…' பிரதமர் மோடி பேச்சு

PM Narendra Modi: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது பதிலுரை ஆற்றி வருகிறார். 

Bihar SIR | பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் உடனடியாக தலையிடுவோம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் … Read more

'தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான்…' மக்களவையில் கனிமொழி அனல் பறக்க பேச்சு!

Kanimozhi: கங்கைகொண்ட சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசி உள்ளார்.

“பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள் … Read more

விபத்தில் தப்பிய முதியவர்..ரிவர்ஸில் வந்து காரை ஏற்றிய இளைஞர்! ஷாக்கிங் சிசிடிவி..

Jammu Hit And Run Shocking CCTV : ஒரு வயதானவர், ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்ல, அவரது வண்டியை லேசாக தட்டிய வாகனம், ரிவர்ஸில் வந்து அவர் மீது ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

பஹல்காம் தாக்குதலுக்காக அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை? – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை?. இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை என மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில் இன்று பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும், ஒவ்வொரு நொடியும் தங்கள் … Read more