ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல்

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள தலை​மை​யிடம் ரூ.2.7 கோடி லஞ்​சம் கொடுத்​தும் சீட் தரவில்லை என்று அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் மதன் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக கட்சித் தலை​வர் லாலு​வின் வீட்​டின் முன்பு அவர் சட்​டையை கிழித்​து, தரை​யில் புரண்டு கதறி அழு​தார். பிஹாரின் மதுபனி பகு​தியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) மூத்த தலை​வர் மதன் ஷா. இவர் மதுபனி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ஆர்​ஜேடி சார்​பில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் … Read more

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் ரெய்ச்​சூர் மாவட்​டம் லிங்​சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்ற சிர்​வார் வட்​டார மேம்​பாட்டு அதி​காரி பிர​வீன் குமார் நேற்று முன்தினம் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். அவர் ஊரக வளர்ச்சி மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை​யின் விதி​முறை​களை மீறிய​தால் இந்த நடவடிக்​கைக்கு ஆளாகி இருப்​ப​தாக அத்​துறை​யின் மாவட்ட‌ ஆணை​யர் அருந்​ததி சந்​திரசேகர் தெரி​வித்​தார். கர்​நாடக அரசின் இந்த நடவடிக்​கைக்கு பாஜக, ஆர்​எஸ்​எஸ், பஜ்ரங்தளம் உள்​ளிட்ட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​து உள்​ளனர்​. … Read more

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததன்மூலம் சிபிஎம்-பாஜக கூட்டு அம்பலம்: காங்கிரஸ்

திருவனந்தபுரம்: மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் – பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், “மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற கேரள அரசின் முடிவு, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சான்றாகும். சிபிஎம் – பாஜக இடையே நீண்டகாலமாக … Read more

பிஹார் தேர்தல்: 143 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது ஆர்ஜேடி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்களின் பட்டியலை பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) வெளியிட்டுள்ளது. ஆர்ஜேடி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அக்கட்சியின் இளம் தலைவரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ரேணு குஷ்வாஹா, பிஹாரிகஞ்ச் தொகுதியிலும், அருண் குப்தா பர்ஹாரியா தொகுதியிலும் விஷால் ஜெய்ஸ்வால் மகாராஜ்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவடையாமல் இருந்த நிலையில், … Read more

'ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது' – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடினார். அப்போது கடற்படை … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: 53 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

பாட்னா: வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக பிஹார் தேர்​தல் நடத்​தப்​படு​கிறது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, லோக் ஜன சக்தி (ராம்வி​லாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி … Read more

பிஹாரில் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர்

பாட்னா: பிஹாரின் பாகல்​பூரை சேர்ந்த பாஜக மூத்த தலை​வர் அஸ்​வினி குமார் சவுபே. முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான இவர் பாகல்​பூரில் செல்​வாக்​குமிக்க தலை​வ​ராக விளங்​கு​கிறார். இவரது மகன் அர்​ஜித் சரஸ்​வத் சவுபே (43). பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அர்​ஜித்​துக்கு சீட் கிடைக்​கும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், பாகல்​பூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி பாஜக வேட்​பாள​ராக ரோஹித் பாண்டே என்​பவர் அறிவிக்​கப்​பட்​டார். இதற்கு அர்​ஜித் கடும் எதிர்ப்பை பதிவு செய்​தார். பாஜக வேட்​பாள​ருக்கு எதி​ராக சுயேச்​சை​யாக பாகல்​பூர் தொகு​தி​யில் … Read more

சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை … Read more

உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறார்களா? இந்த முதலீடு மிகவும் அவசியம்!

Post Office Scheme: மத்திய அரசின் தபால் அலுவலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

டெல்லிக்கு இந்திரபிரஸ்தா பெயர் வைக்க கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் கபில் மிஸ்​ரா​வுக்​கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செய​லா​ளர் சுரேந்​திர குமார் குப்தா எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மகா​பாரதத்​தில் டெல்லி இந்​திரபிரஸ்தா என அழைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே பழங்​கால வரலாறு மற்​றும் கலாச்​சா​ரத்​துடன் தொடர்பு படுத்​தும் வகை​யில் தலைநகர் டெல்லி பெயரை இந்​திரபிரஸ்தா என மாற்ற வேண்​டும். அதே​போல் இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம், டெல்லி ரயில் நிலை​யம், ஷான​கான்​பாத் வளர்ச்சி வாரி​யம் ஆகிய​வற்​றுக்​கும் இந்​திரபிரஸ்தா என்ற பெயரை வைக்க வேண்​டும். பெயர்​கள் … Read more