பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக. 1-ம் தேதி முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர்

புதுடெல்லி: பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் (பிஎம்-விபிஆர்ஓய்) என்ற பெயரில் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த … Read more

கேரள சிறையில் இருந்து தப்பிய ‘ஒற்றைக் கை’ ஆயுள் தண்டனை குற்றவாளியை மீண்டும் கைது செய்த போலீஸார்

கண்ணூர்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சவும்யா (23). இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷோரனூருக்கு பயணிகள் ரயிலில் சென்றுள்ளார். அந்த ரயில் பெட்டியில் சவும்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சவும்யா பயணித்த ரயில் பெட்டியில் ஏறிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (வயது 30) என்பவர் ஏறியுள்ளார். இவருக்கு ஒரு … Read more

கேமிங் செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம்? – தீவிரவாதிகளின் ரகசிய நடவடிக்கை

ஸ்ரீநகர்: பப்ஜி மாதிரியான ஆன்லைன் வார் கேமிங் செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கேமிங் செயலிகள் தான் இப்போது தீவிரவாதிகளுக்கு தகவல் தொடர்பு சார்ந்து முக்கியமானதாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் ரகசியமாக நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத குழுக்கள் தகவல் தொடர்புக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வழக்கமான வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பிக்கும் … Read more

கர்நாடக வாக்காளர் பட்டியல் போல பிஹாரிலும் முறைகேடு நடக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: கர்​நாட​கா​வில் ஒரு மக்​களவை தொகு​தி​யில் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு நடந்​ததற்​கான 100% ஆதா​ரம் உள்​ளது என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடை​பெறுகிறது. இதில் இது​வரை 52 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்கு எதிர்க்​கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இதுகுறித்து காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் மக்​கள​வைத் தேர்​தல் முடிந்த பிறகு, … Read more

“தவறு செய்துவிட்டேன்; சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தியிருக்க வேண்டும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் நான் தவறிழைத்துவிட்டேன் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்த்து சுயபரிசோதனை செய்து கொள்ளும்போது, நான் எங்கெல்லாம் சரியாகச் செய்தேன், எங்கெல்லாம் தவற விட்டேன் என்பதைப் பார்க்கிறேன். நிலம் கையகப்படுத்துதல் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு … Read more

தேஜஸ்வி யாதவை கொல்ல ஜேடியு – பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணி சதி செய்ததாக, அவரது தாயார் ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிஹார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி கூறும்போது, “தேஜஸ்வியை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பிஹாரில் நிறைய கொலைகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒரு கொலையாக இருக்கும். இதற்கான சதியில் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரி, உதவி அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவையின் துணைத்தலைவர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலானது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 மற்றும் குடியரசு … Read more

RBI-யின் புதிய அறிவிப்பால் வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Reserve Bank of India Latest News: வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆர்‌பி‌ஐ வெளியிட்டுள்ளது. மாதத் தவணை மூலம் கடனை அடைத்து வரும் நிலயில், சில இஎம்ஐ தவறவிடுவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி, சிறை குற்றமாக கருதப்படவில்லை. ஆனால் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.

தாய்லாந்து – கம்போடியா மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை

புதுடெல்லி: தாய்லாந்து – கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏதேனும் சில காரணங்களால் அந்த பிரச்சினை தீவிரமடைவதும் பின்னர் தணிவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு நாட்டு எல்லையில் ராணுவ மோதல் நிகழ்ந்து வருகிறது. கனரக … Read more

மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் … Read more