இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

புதுடெல்லி: பிஹாரில் நிரந்​தர​மாக இடம் ​பெயர்ந்​தவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளதை அனு​ம​திக்க முடி​யு​மா? என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கேள்​வி யெழுப்பி உள்​ளார். பிஹாரில் வாக்காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்ள நிலை​யில் அவர் இவ்​வாறு கூறி​யுள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: மிகச்சரியான வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பதில் தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யான அணுகு​முறை யுடன் செயல்​படு​கிறது. நியாய​மான தேர்​தல், வலு​வான ஜனநாயகத்​தின் அடித்​தளம் இல்​லை​யா? தகு​தி​யற்ற … Read more

அனில் அம்பானி குழுமத்தில் சோதனை: ரூ.3,000 கோடி மோசடி புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை

மும்பை: அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை (இடி) நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. அனில் அம்பானி குழும நிறுவனங்கள் வங்கியில் ரூ.1000 கோடி அளவிற்கு கடன் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி குழுமத்தின் 50 நிறுவனங்களுக்குச் சொந்தமான 35-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் 25 நபர்களிடம் அமலாக்கத் துறை நேற்று சோதனை … Read more

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைக்கும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப்படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த பட்டியலில் மத்திய அரசு சிலரது பெயர்களை மட்டுமே தேர்வு செய்கிறது. மற்றவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதில்லை. கடந்த 2019, 2020, 2022-ம் ஆண்டில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில நீதிபதிகளின் பெயர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் 2 … Read more

வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு: புதிய எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசி நாளில் அன்புமணி மட்டும் அவைக்கு செல்லவில்லை. ஓய்வு பெறும் எம்பிக்கள் குறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறியதாவது: அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த … Read more

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு – ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை சுமுகமாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெறும் வைகோ உள்ளிட்ட எம்பிக்களுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குக் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் … Read more

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த … Read more

அமலாக்கத்துறை சோதனை எங்கள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது -ரிலையன்ஸ் நிறுவனங்கள்

Reliance Power Statement In Tamil: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தொடர்பான வணிகங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளன. அதுக்கு குறித்து ரிலையன்ஸ் நிறுவனங்கள் அளித்த பதில் என்ன? முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை

பாட்னா: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபட்டுவிடக் … Read more

இங்கிலாந்துக்கு இனி 95% வேளாண் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்யலாம்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என்ற பெயரிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பியூஷ் … Read more

கீழடி அறிக்கை நிலை என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது: “கீழடி அகழாய்வுக்கு தலைமை ஏற்ற தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. அவரது ஒப்புதலுடன் நிபுணர்களின் முடிவுகளையும் இணைத்து அதிகாரப்பூர்வ … Read more