காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து ராணுவ வடக்குப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ரஜோரி செக்டாரில் உள்ள கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணு வத்தின் கூட்டு நடவடிக்கை மே 3-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு ஒரு குகைக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை காலை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை … Read more

தேசியவாத காங். தலைவர் பதவியில் நீடிப்பேன் – உயர்நிலைக் குழு கூட்டத்துக்குப் பிறகு சரத் பவார் அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்வேன் என்று சரத் பவார் அறிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவராக 24 ஆண்டுகள் சரத் பவார் நீடித்து வருகிறார். இந்த சூழலில் அவரது மகள் சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித் பவார் இடையே மோதல் ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. … Read more

காவல் அதிகாரிகளை காதல் வலையில் சிக்க வைத்த பச்சைக்கிளி..! 68 வயது ஆசையால் ஆப்பு..!

காவல் அதிகாரிகளிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலை விரித்து பணம் பறித்த கேடி லேடியை போலீசார் கைது செய்துள்ளனர். அழகை நம்பி வழிந்தவர்கள் வலையில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. ஒரு காலத்தில் தமிழக காவல்துறையை கலங்க விட்ட சிவகாசி ஜெயலட்சுமி போல கேரள போலீசாரை முகநூல் மூலம் மிரள விட்டுள்ள அஸ்வதி என்கிற அச்சு , அனுஸ்ரீ என்கிற அனு இவர் தான்..! பெயர்கள் மட்டும் தான் 4 .. இவரிடம் … Read more

ஊழல் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

புது டெல்லி: ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா மற்றும் டெல்லி முதல்வரும், … Read more

நிதி நெருக்கடியால் மே 12 வரை விமானங்கள் ரத்து என்று அறிவித்தது கோஃபர்ஸ்ட்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோ ஃபர்ஸ்ட் விமானநிறுவனம் மே 12ம் தேதி வரை விமானசேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தில் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ள அந்நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சமயற்றத் தன்மையில் காணப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதிக்கு ஆளாகினர். பயணிகளுக்கு கட்டணம் முழுவதும் திருப்பித் தரப்படும் என்று கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மே 3ம்தேதி முதல் 3 நாட்களுக்கு விமானங்களை ரத்துசெய்வதாக … Read more

இதை விட வேறு என்ன வேண்டும்? – ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் பிரதமருக்கு நன்றி

புதுடெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு தயாரிப்பாளர் விபுல் ஷா நன்றி தெரிவித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம், நேற்று இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: பிரதமருக்கு டெல்லியில வேலை இல்லையா.? – நோஸ் கட் செய்த தாத்தா.!

பிரதமர் மோடிக்கு டெல்லியில் வேலையே இல்லையா என கர்நாடாக தாத்தா ஒருவர் பேசும் வீடியோ வைரலாகிவருகிறது. கர்நாடகாவில் வருகிற புதன்கிழமை (10ம் தேதி) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து 13ம் தேதி சனிக்கிழமை அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றி பெரும் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், மாநிலத்தில் பிரச்சாரம் கடைசி நிலையை எட்டியுள்ளது. பிரதமர் மோடி இன்று 26 … Read more

போதையில் மணமகள் முகத்தில் மணமகன் செய்த காரியத்தால் திருமணமே கேன்சல்!

Bizarre Incident: போதையில் மணமகளின் முகம் முழுவதிலும் குங்குமத்தை பூசி மணமகன் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் சூறாவளிப் பிரச்சாரம்..!

கர்நாடகாவில் நாளை மறுநாள் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அங்கு 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்றும், நாளையும் பெங்களூரு நகர எல்லைக்குட்பட்ட 20 தொகுதிகளில் அவர் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கிறார். கர்நாடகாவில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி,  முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் 3 நாட்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் … Read more

‘போலியான இரட்டை எந்திர வாக்குறுதி’ – மணிப்பூரை சுட்டிக்காட்டி சிதம்பரம் தாக்கு

புதுடெல்லி: போலியான இரட்டை எஞ்சின் வாக்குறுதி குறித்து கர்நாடக வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூரில் ‘இரட்டை எந்திர அரசு’ ஆட்சியின் விளைவுகளைப் பாருங்கள். இரண்டு எந்திரங்களும் தோல்வியடைந்து விட்டன. மாநில அரசு உட்கட்சி பூசல்களால் பிளவுப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசிடம் மகிழ்ச்சியான தீர்வுகள் உள்ளன. அதன் விளைவாக மேதே மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான இடைவெளி … Read more