ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர் பயன்பாடு நிறுத்தம் – ஜம்மு காஷ்மீர் விபத்தைத் தொடர்ந்து ராணுவம் நடவடிக்கை
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) துருவ் -ன் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மலைப் பிரதேசமான கிஷ்த்வார் மாவட்டம் மார்வா பகுதியில் மச்னா கிராமத்தில் கடந்த 4ம் தேதி ராணுவத்துக்கு சொந்தமான ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானத்தில் மூன்று பேர் இருந்தனர். இந்த விபத்தில் தொழில்நுட்ப பிரிவினைச் சேர்ந்த வீரர் … Read more