மம்தா பானர்ஜிக்கு என்னாச்சு? அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் – நடு வானில் திக் திக்!

மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்க வட மாவட்டங்களில் இருநாள்கள் பிரச்சாரம் செய்தார், அதைத் தொடர்ந்து அவர் நேற்று மதியம் ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கனமழை பெய்தது. இதனால் ஹெலிகாப்டரை உடனடியாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டு … Read more

ஜி-20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் – வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்ற உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

சென்னை: உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நரேந்திர நகரில் நடைபெற்ற ஜி-20 உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தின்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தின்போது முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றார். அப்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், “இந்த தெய்வீகத் தன்மை கொண்ட இமயமலைப் பள்ளத்தாக்குக்கு நாங்கள் உங்களை உளப்பூர்வமாக வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். இந்த ஆண்டு ஜி-20-யின் கருப்பொருள் `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது அடிப்படையில் … Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்துக்குள் மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதல்

பங்க்குரா: மேற்குவங்க மாநிலத்தின் பங்க்குரா மாவட்டத்தில் உள்ள ஆண்டா ரயில் நிலையத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று அதிகாலை மோதிக் கொண்டன. இதில் 12 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஒடிசா மாநிலத்தின் பாலசூர் பகுதியில் கடந்த 2-ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மற்ற இரண்டு ரயில்கள் மீது மோதிய விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் 1,000 பேர் காயம் அடைந்தனர். அதன்பின் கடந்த 5-ம் தேதி அசாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கில் … Read more

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் – கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் குறைந்தது

பெங்களூரு: கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத தால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று மாலை 7 … Read more

10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல்.. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்

டெல்லி: 10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வான 6 எம்.பிக்கள், குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 எம்.பிக்கள், கோவாவில் இருந்து தேர்வான ஒரு எம்.பி. என மொத்தம் 10 இடங்கள் ஜூலை, மாதங்களுக்குள் காலியாகவுள்ளன. இதையடுத்து, அந்த இடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் அன்றையே தினமே … Read more

விதான சவுதா கட்டிடத்தில் வாஸ்து காரணமாக 5 வருடங்களாக மூடப்பட்டிருந்த தெற்கு நுழைவு வாயில் கதவை திறந்தார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக தலைமைச் செயலகம் செயல்படும் விதான சவுதா கட்டிடத்தின் 3-வது மாடியில் முதல்வரின் அலுவலகம் உள்ளது. இதற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் தெற்கு நுழைவு வாயில் வாஸ்து சரி இல்லை என கூறப்பட்டதால் அதன் கதவு 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இதனை அறிந்த முதல்வர் சித்தராமையா இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, வாஸ்து காரணமாக அந்த கதவு மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் அந்த வாயில் வழியே … Read more

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கம் – காயத்தால் மம்தா பானர்ஜிக்கு சிகிச்சை

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 8ல் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் சென்ற அவர், இன்று மதியம் கொல்கத்தா திரும்பினார். ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கனமழை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, முதல்வர் … Read more

4, 5 நாளைக்கு வச்சு செய்யப்போகும் வருண பகவான்… ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. நாட்டின் 80 சதவீத பகுதிகளில் பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், கொங்கன், … Read more

நாட்டின் பிரதமர் பெயர்கூட தெரியாதா? – உ.பி.யில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமகனின் தம்பியை கரம் பிடித்தார்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் … Read more

இதென்ன கேரளாவிற்கு வந்த சோதனை? கடவுளின் தேசத்தில் தவியாய் தவிக்க விட்ட பருவமழை!

கடவுளின் தேசம் என்றால் சட்டென நினைவுக்கு வருவது கேரளா மாநிலம். அதுவும் நம்ம தமிழ்நாட்டிற்கு பக்கத்தில். கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நினைத்தால் போதும். வண்டியை எடுத்து கொண்டு சட்டுனு கிளம்பிவிடுவர். பச்சை பசேலென்று காணப்படும் இயற்கையை ரசிக்க, இனிக்க இனிக்க பேசும் மலையாள மொழியை கேட்க, விடுமுறையை கொண்டாடி தீர்க்க பிளான் போட்டு சென்றுவிடுவர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை கேரளாவின் செழிப்பிற்கு முக்கிய காரணம் பருவமழையும், அதை சரியான முறையில் பயன்படுத்தும் … Read more