உ.பி.யில் பிரம்மோஸ், ட்ரோன்கள் தயாரிக்கப்படும் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தயாரிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, அலிகர், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட 6 பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில் வழித்தடத்தில் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் புதியஆலையை … Read more

500 ரூபாய் நோட்டுகளை காணவில்லையா… ரிசர்வ் வங்கியின் ரியாக்சன் என்ன?

500 Rupees Notes Missing Issue: சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என அறிக்கை ஒன்று வெளியான நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவை வாட்டும் வெப்ப அலை: உத்தரப் பிரதேசம், பிஹாரில் 98 பேர் பலி

பாட்னா / லக்னோ: வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வெப்ப அலைகளால் 98 பேர் பலியாகினர். இவர்களில் உத்தரப் பிரதேசத்தில் 54 பேரும், பிஹாரில் 44 பேரும் பலியாகியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மிரட்டிய ஜூன் 15, 16, 17: வழக்கமாகவே கோடை காலத்தில் வட இந்தியாவில் வெப்பம் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் அதே நிலைதான். அதுவும் கடந்த ஜூன் 15, 16, 17 தேதிகளில் உத்தரப்பிரதேசம் மற்றும் … Read more

அமித் ஷா பதவியை காலி பண்ணுங்க… அதுக்கு பதிலா… பெருசா பற்ற வைத்த சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி என்றாலே சர்ச்சைக்குரிய நபர் என்று தான் அரசியல் களத்தில் நினைவுக்கு வரும். குறிப்பாக தமிழக அரசியலுடன் அதிகம் பொருத்தி பார்க்க முடியும். பூதாகரமாக கிளம்பிய பல வழக்குகளில் முன்னோடியாக இருந்து ஆட்டம் காண வைத்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர், 6 முறை எம்.பி, பாஜக உறுப்பினர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடப்பிரிவில் ஆய்வு பட்டம், பேராசிரியர், விராட் இந்துஸ்தான் சங்கத்தின் தலைவர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டவர். சர்ச்சைக்குரிய சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் இருந்து … Read more

கர்நாடகா அரசியலில் சூட்டை கிளப்பியுள்ள ஏழைகளுக்கான இலவச அரிசி திட்டம்..!!

காங்கிரஸல் அளித்த  ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அன்ன பாக்யா திட்டத்தை அமல்படுத்த சிறிது காலம் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய தந்தையின் செயலால் இரண்டு குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தனர். மங்கப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலை ஒன்றை கவனக்குறைவாக கடந்ததில் விபத்து நிகழ்ந்தது. சாலையை கடக்க முயன்றபோது வாகனங்கள் ஏதும் வருகிறதா என சற்று நேரம் கூட கவனிக்காமல் சுரேஷ் அப்படியே செல்ல, அவ்வழியாக வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் … Read more

கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது – ஜே.பி.நட்டா தகவல்

அகர்தலா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு திரிபுரா மாநிலம் சன்டிர்பஜார் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: இந்தியா முன்பு ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற நாடாக விளங்கியது. இப்போது சிறந்த நிர்வாகம் மற்றும் அனைத்து நிலையிலும் வளர்ச்சி ஆகிய காரணங்களால் உலக நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், முன் … Read more

எலும்பு முறிவு ஏற்பட்ட மகனுக்கு சக்கர நாற்காலி கிடைக்காததால் மருத்துவமனை மாடிக்கு ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர்

கோட்டா: மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகனை, மின்சார ஸ்கூட்டரில் ஏற்றி, லிப்ட் வழியாக 3வது தளத்துக்கு சென்ற வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ளது எம்பிஎஸ் மருத்துவமனை. மிகப் பெரிய மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நோயாளிகளுக்கு சற்கர நாற்காலி போதிய அளவில் இல்லை. இந்த மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர், காலில் எலும்பு முறிவு … Read more

நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்னிந்தியாவில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.   

நடப்பாண்டில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 30 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்ப்பு

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதால், நடப்பாண்டில் இறக்குமதி அளவு 30 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒருபங்கு ரஷ்யாவிடமிருந்து பெறப்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனமான ONGC யின் தலைவர் அருண்குமார் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2021-22ல் ரஷ்யாவிடம் இருந்து 2 சதவீதமாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இறக்குமதி அளவு 30 சதவீதத்தை … Read more