பிஎஸ்எல்வி சி-55 மூலம் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. வர்த்தக நோக்கில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியாவின் நியூஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனம், சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு ஏற்ப ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன. டெலியோஸ்-2 எனும் பிரதான செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொறு துணை செயற்கைக்கோளான லூமிலைட்-4, தொழில்நுட்ப செயற்கைக்கோளாகும். … Read more

கர்நாடகாவில் ‘இணைந்த கைகள்’ – சித்தராமையா + டி.கே.சிவக்குமார் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அமைதி நிலவுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் சனிக்கிழமை வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் சட்டைப் பையைச் சரிசெய்கிறார். பின்னர் இருவரும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். இந்த வீடியோவுடன் சேர்த்து, ‘ஒன்றாக இணைந்து நம்மால் வெற்றி பெற … Read more

அரசு இல்லத்தை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.  

“ஊழலால் கர்நாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு” – நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கருத்து

பெங்களூரு: ஊழல் புற்றுநோய்க்கு நிகரானது. நிர்வாகத் திறனை அரித்துவிடும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக கர்நாடக மாநிலம் அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியது: “புற்றுநோய்க்கு நிகரானது ஊழல். நிர்வாகத் திறனை அரித்துவிடும். ஊழல் காரணமாகவே கர்நாடக மாநிலம், அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை. கர்நாடகாவில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இதேநிலைதான் … Read more

"வார்னிங்".. அத்திக் அகமது கொலைக்கு பழி தீர்க்கப்படும்.. விரைவில் வருவோம்.. அல் கொய்தா பகீர் எச்சரிக்கை!

டெல்லி: உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த அத்திக் அகமது கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு பழிதீர்க்க நாங்கள் வருவோம் என்று அல் கொய்தா தீவிரவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபல தாதா அத்திக் அகமது. தன்னை எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மிகக் கொடூரமாக கொலை செய்வதுதான் அத்திக் அகமதின் ஸ்டைல். இவர் மீது 100-க்கும் மேற்பட்ட கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் … Read more

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட்..!

சிங்கப்பூர் நாட்டின் இரு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி பிற்பகல் 2.19 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் டெலியோஸ் – 2, லுமிலைட் – 4 ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. திட்டமிட்டபடி இரு செயற்கைக்கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து, சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ … Read more

ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸுக்குச் சென்றதால் கர்நாடக தேர்தல் முடிவுகள் மாறுமா? – அமித் ஷா பதில்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து காங்கிரஸுக்குச் சென்றதால், பாஜகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதன் விவரம்: ”கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. பாஜக எப்போதுமே … Read more

பறிபோன எம்.பி. பதவி.. அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி.. கிடைத்ததும், காலி செய்ததும் ஒரே தேதி!

டெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, தான் 18 ஆண்டுகளாக தங்கி இருந்த டெல்லி அரசு பங்களாவை ராகுல் காந்தி இன்று காலி செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் கோலார் தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், வங்கிகளில் … Read more

உடனே விண்ணப்பீங்க..!! இந்திய ராணுவத்தில் வேலை..!!

இந்திய ராணுவத்தில் Technical Graduate Course பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Indian Army பதவி பெயர்: Technical Graduate Course கல்வித்தகுதி: B.E/B.Tech, M.Sc சம்பளம்: ரூ.56,000 – ரூ.2,24,100 வயதுவரம்பு: 20 – 27 வயது கடைசி தேதி: 17.05.2023 கூடுதல் விவரம் அறிய: https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC-138__JAN_2024___2_.pdf https://www.joinindianarmy.nic.in/officers-notifications.htm Source link

அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி – மக்களின் இதயங்களில் குடியிருப்பதாக காங். கருத்து

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். 2004 முதல் 2019 வரை அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2029 முதல் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12ம் எண் கொண்ட வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், … Read more