ரயில் பயணிகள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்த வழக்கு: உத்தர பிரதேசத்தில் ஒரு நபரை கைது செய்திருப்பதாக தகவல்!

கேரளாவின் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், நொய்டா விரைந்த போலீசார் ஷாருக் சைபி என்ற நபரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் சென்ற விரைவு ரயில், எலத்தூர் பகுதியில் சென்றபோது ஒருவர், பயணிகளின் மீது திடீரென எரிபொருளை ஊற்றி தீ வைத்ததில், அச்சத்தில் 3 பேர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து பலியாகினர்.  9 … Read more

சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 50 பேரை காணவில்லை என தகவல்

கேங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 50 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சிக்கிமில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாதுலா மலை முகடுகள் உள்ளன. சீன எல்லையை ஒட்டிய இந்த பகுதிகளில் மார்ச் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், நாதுலாவுக்குச் செல்லும் ஜெ.என். சாலையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த சாலையின் 13வது மைலுக்கு அப்பால் செல்ல … Read more

சிக்கிம் பனிச்சரிவில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள்… பலர் உள்ளே சிக்கி கொண்டதால் பதற்றம்!

இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இங்கு முழுவதும் பனி படர்ந்து காணப்படும். மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். இந்நிலையில் நாதுலா எல்லை பகுதியில் இன்று பிற்பகல் திடீரென மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்து உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் … Read more

7,500 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட SSC!! சம்பளம் : ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம் Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக … Read more

பாஜகவினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதல்..!!

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி … Read more

“மோடியின் கல்வித் தகுதிக்காக அல்ல, அவரது வசீகரத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர்”- அஜித் பவார்

மும்பை: “கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மீதான வசீகரமே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததே தவிர, அவரது கல்வித் தகுதி அல்ல. இதைப் பற்றி பேசுவதைவிட வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் என நாட்டில் பல முக்கியமாக பிரச்சினைகள் உள்ளன” என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றி எதிர்க்கட்சியினர் சர்ச்சையை கிளப்புவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அஜித் பவார், “கடந்த 2014-ம் ஆண்டு நடந்த … Read more

மோடி படித்தது எஞ்சினியரிங்கா? 1992 ஆம் ஆண்டு பத்திரிகை வைரல்.. மெக்கானிக்கலா? சிவிலா?

பிரதமர் மோடி பட்டம் படித்ததற்கான சான்றிழைழை கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, கல்வி தகுதியை பிரதமர் மோடி எதற்காக மறைக்க வேண்டும்? அதில் உள்ள மர்மம்தான் என்ன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக பிரதமர் … Read more

சிக்கிமில் திடீர் பனிச்சரிவு: சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழப்பு

சிக்கிம்: பனிச்சரிவில் 6 பேர் பலி சிக்கிம் நாதுலா எல்லைப் பகுதியில் திடீர் பனிச்சரிவு: சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழப்பு சிக்கிமின் நாதுலா எல்லைப் பகுதியில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் காயம் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம் Source link

66.9 கோடி பேரின் தகவல்கள் விற்பனை விவகாரம்: 3 வங்கிகள் உட்பட 11 நிறுவனங்களுக்கு  ஹைதராபாத் போலீஸார் நோட்டீஸ்

ஹைதராபாத்: நாடு முழுவதும் வசிக்கும் 66.9 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை (Personal Data) விற்பனைக்கு வைத்தது தொடர்பாக 3 வங்கிகள் உட்பட 11 நிறுவனங்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை சில நிறுவனங்கள் மூலம் சேகரித்து, அவற்றை சிலர் விற்பனை செய்ய முன்வந்த தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக சைபராபாத் போலீஸார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை … Read more