சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ரூ.2,000 கோடிக்கு மதுபான ஊழல் – அமலாக்கத்துறை

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மதுபான ஊழல் நடந்துள்ளதாகவும், உயர்மட்ட அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில், மது விற்பனைக்கு லஞ்சம், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதற்கு கமிஷன் என நடந்த மிகப் பெரும் மோசடி தொடர்பான வழக்கில், மதுபான தொழிலதிபர் அன்வர் தேபார், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் மொத்த மதுபான விற்பனையில் … Read more

மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தகுமாரின் ரூ.143 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்குச் சொந்தமான ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல், நந்தகுமார் அவரது மணப்புரம் அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் மூலம் பொதுமக்களிடமிருந்து விதிக்குப் புறம்பாக பணம் பெற்றதாகவும் அதை வசூலிக்க அவர் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் நந்தகுமாருக்குச் சொந்தமான 6 … Read more

5 மணி ரூல்ஸ்… திபுதிபுனு ஏறிய 40 பேர்… மலப்புரம் டபுள் டெக்கர் படகு நீரில் மூழ்கியது எப்படி?

கேரள மாநிலத்தில் நடந்த டபுள் டெக்கர் படகு விபத்து தான் தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் எனப் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது கிடைத்த தகவலின்படி, 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து பின்னணி குறித்து இங்கே … Read more

CBSE 10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள்…ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

CBSE 10th-12th Result 2023: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஆன்லைனில், SMS மற்றும் DigiLocker மூலமாக மாணவர்கள் தங்கள் முடிவுகளை சரிப்பார்க்கலாம்.

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய விவசாய சங்கத்தினர்.. மே 21ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனைக் கைது செய்ய விவசாயிகள் கெடு!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷணை வரும் 21ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு விவசாய அமைப்பு வெளியில் இருந்து ஆதரவு தரும் என்று குறிப்பிட்டனர். மே 21ம் தேதிக்குள் அரசு முடிவெடுக்கவில்லை என்றால், தாங்கள் அடுத்த வியூகத்தை வகுப்போம் … Read more

பேராசிரியை வாட்ஸ்அப் ஹேக் செய்து கல்லூரி மாணவிகளை மிரட்டிய மர்ம நபர்..! நான் என்ன சொல்றேனோ அதை செய்யும்படி மிரட்டல்..!!

உ.பி-யில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக இருப்பவர் நசீம். இவரது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு குறுஞ்செய்தி சென்று உள்ளது.அதன்பின் அந்த கணக்கில் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தொடர்ச்சியாக வந்து உள்ளன. இதுபோன்று 6-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு நடந்து உள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், பேராசிரியையிடம் சென்று, முறையிட்டனர்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது என உணர்ந்து உள்ளார். … Read more

இன்று முதல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை..!!

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இருந்து சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது வரும் 10-ம் தேதி கர்நாடக … Read more

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இருந்து 23 ஆயிரம் பேர் மீட்பு: சூரசந்த்பூரில் ஊரடங்கு பகுதி அளவில் தளர்வு

இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திலிருந்து இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப் பட்டுள்ளனர். வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு பகுதி அளவில் தளர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் ராணுவமும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவும் கடந்த 96 மணி நேரமாக தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இதன் பலனாக படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. கடந்த 24 மணி … Read more

கேரளாவில் டபுள் டெக்கர் படகு விபத்து: தண்ணீரில் மூழ்கிய மக்கள்… பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பரப்பனன்குடியில் பொதுமக்களை கவரும் வகையில் சுற்றுலா படகுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இங்கு பாயும் பூரபுழா நதியானது அரபிக் கடலில் சென்று கலக்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் ஆர்வத்துடன் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சுற்றுலா படகுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. டபுள் டெக்கர் படகு விபத்து நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு அடுக்குகள் கொண்ட டபுள் டெக்கர் படகு ஒன்றில் அதிகப்படியான பயணிகள் … Read more

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்..!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தப்படும் என ராணுவ விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புதுறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை கிட்டத்தட்ட … Read more