‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி
பெங்களூரு: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலமாக்கியுள்ளது. அந்த படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுகிறது என கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more