‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் தேசத்துக்கு எதிரான சதி அம்பலம்: பிரதமர் மோடி

பெல்லாரி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்படத்தை ஆதரித்துப் … Read more

காலக்கொடுமை.. ஓடும் பைக்கில் முத்தமிட்டுக் கொண்ட இளம்பெண்கள்.. வலைவீசும் போலீஸ்.. எதுக்கு?

மும்பை: ஓடும் பைக்கில் இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த 2 பெண்களையும் போலீஸார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தலையில் அடித்துக்கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. மேற்கத்திய நாடுகளை போல மாறுகிறோம் என நினைத்துக் கொண்டு, சில இளைஞர்கள் கலாச்சார … Read more

அலட்சியத்துக்கு அபராதம் 4000 கோடி ரூபாய்! அரசுக்கு ஃபைன் போட்ட பசுமைத் தீர்பாயம்

NGT Penalize Bihar Government: பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது

300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

டெல்லி அருகே, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது பைக் சாகசங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா செளஹான். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக பைக் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. தனது கவஸாக்கி நிஞ்சா பைக்கை ஆக்ரா – டெல்லி எக்ஸ்பிரஸ்வே சாலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றபோது … Read more

சரத் பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – தேசியவாத காங்கிரஸ் குழு ஒருமனதாக தீர்மானம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கட்சியின் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தார். இதை ஏற்க மறுத்து கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்யக்கூடாது என அவர்கள் சரத் பவாரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக … Read more

தி கேரளா ஸ்டோரி.. தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் அருமையான திரைப்படம்.. பிரதமர் மோடி பாராட்டு

பெங்களூர்: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி இருப்பதாக அவர் கூறியுள்ளார். பாலிவுட் இயக்குநர் சுதிப்தா சென் இயக்கத்தில் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் இந்து மதத்தைச் சேர்ந்த சுமார் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்த … Read more

கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் தற்கொலை..!!

பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவின்நாத் பாடிபில்டர், கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐஷு மிஸ் மலபார் பட்டத்தை வென்றவர்.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தவர்கள் காதலர் தினத்தில் கரம் கோர்த்தனர். திருநங்கைகளான பிரவீனும், ரிஷானாவும் திருமணத்தின் மூலம் இணைந்தனர். இந்நிலையில் இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன். பிரவீன் சமூக … Read more

கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி வெற்றியை வாகை சூடும் பாஜக..?

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது? பாஜகவா? காங்கிரஸா? யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்கிற கருத்து கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இதில், கவணிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்து கணிப்பு எதுவென்றால், TV9 C-Voter நடத்திய கருத்து கணிப்புத்தான். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடும் என கடந்த மாதம் துண்டு போட்டு தாண்டாத குறையாக கணிப்புகளை வெளியிட்ட, TV9 C-Voter, … Read more

எல்லையில் நிலைமை சீராக உள்ளது; பரஸ்பரம் மரியாதையுடன் நடப்போம் – ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு

கோவா: எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துக் கொண்டனர். அப்போது சீன வெளியுறவு அமைச்சர், “இந்திய – சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் … Read more

Delhi: குறைந்த கொரோனா பாதிப்பு… ஆனால் அதிகரித்த உயிரிழப்பு… ஒரே நாளில் 36 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரித்தது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் 3,611 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 36,244 லிருந்து 33,232 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 36 … Read more