19 வயது இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது!

பெங்களூருவில் 19 வயது இளம் பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ஆம் தேதி பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் ஒரு பூங்கா அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. கோரமங்களா பகுதியில் இருந்து ஓசூர் முக்கிய சாலையில் பயணித்து அத்திப்பள்ளி வரை சுமார் 40 கிலோமீட்டர் காரில் சென்று பின்பு மீண்டும் கோரமங்களா … Read more

அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்,  இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் … Read more

இன்று முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!

உற்பத்தி செலவினம் அதிகரிப்பு,மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 11 சதவிகிதத்திற்கு மேல் உயர உள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் … Read more

இன்று முதல் தங்க நகைகளை விற்க புதிய கட்டுப்பாடு..!!

தங்க நகைகளை விற்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்தார். அதன்படி, தங்க நகைகளுக்கு இன்று முதல் கட்டாய HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால் மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையினால் நகையை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது அதனுடைய தரம் மற்றும் அதனை செய்தவரின் விவரம் முழுவதும் அறிய … Read more

ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக்கொண்டு பள்ளி சென்ற மாணவனை வகுப்பில் சேர்க்க மறுத்து வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்

தெலுங்கானாவில் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக் கொண்டு சென்ற மாணவனை பள்ளிக்கு வர தடை விதித்த நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து ஆஞ்சநேயர் பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிலாபத் மாவட்டம் உண்டூரில் இயங்கி வரும் செயிண்ட் பால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவன் அபினவ் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு காவி ஆடை அணிந்த படி பள்ளி சென்றுள்ளான். இதனால் அபினவ்வை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் சீருடையுடன் வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுபற்றி … Read more

ம.பி. கோயில் விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பழமைவாய்ந்த பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் ராமநவமி விழாவின்போது கிணற்றின் மீது இருந்த சிலாப் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் … Read more

இனி ஆன்லைன் கேமிங்-ல் வெற்றிபெற்ற பணத்திற்கு 30% வரி..!!

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் எப்படியாவது பணம் சம்பாதித்திட வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர்.ஆனால் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு சிலரே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெறுகின்றனர். அதை நம்பி பலரும் அதில் பணம் கட்டி விளையாடி … Read more

கலாஷேத்ரா விவகாரம் – உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!!

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி வரை கலாக்ஷேத்ரா நடன பள்ளிக்கு விடுமுறை … Read more

ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: இன்று (ஏப்ரல் 1ம் தேதி) புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு குறைத்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த மாதம்தான் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.350 அதிகரித்தது. தற்போது … Read more

போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

போபால் – டெல்லி இடையேயான 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார். 708 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள குஷாபாவ் தாக்ரே ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பிரதமர் … Read more