மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக கையாள்கிறோம்: அனுராக் தாகூர்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமம் எனக்கூறிய அவர், அனைத்து வீரர், வீராங்கனைகளும் தங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார். ஜூன் 1-ல் மல்யுத்த வீராங்கனைக்ளுக்கு ஆதரவாக சம்யுக்த் கிசான் மோர்சா (Samyukt Kisan … Read more

மணிப்பூர் வன்முறை | உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

இம்பால்: பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இருவேறு இனக் குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ள நிலையில் வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மணிப்பூரில் மேய்தி, குக்கி சமூகத்தினரை தவிர, தமிழர்கள், நேபாளர்கள், ராஜஸ்தானியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் உள்ளிட்ட பலர் எல்லை நகரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். … Read more

பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல.. கர்நாடகா உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு

பெங்களூர்: பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமல்ல என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. 6 மாதக் கைக்குழந்தையை கூட தனது காம இச்சைக்கு இரையாக்கும் மனித மிருகங்களும் இந்த நாட்டில் இருக்கின்றன. பெண்கள் உயிருடன் இருக்கும் போது தான் இந்த பிரச்சினை என்றால், அவர்கள் இறந்த பிறகும் கூட விடுவதில்லை சில … Read more

சடலுத்துடன் உடலுறவு கொண்டால் தண்டனை கிடையாதா… கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Mekedatu dam row | “வெறுப்போ, கோபமோ இல்லை” – தமிழகத்துக்கு கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் விளக்கம்

பெங்களூரு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழக மக்கள் சகோதர, சகோதரிகள்போல் அணுக வேண்டும் என்று கர்நாடாக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் அழைப்பு கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார். மேகேதாட்டு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: டோட்டலா மாறுது… இனிமே கம்மி தானாம்… ரயில் பயணிகள் ஏமாற்றம்!

பிரதமர் மோடியே நேரில் வந்து ஒவ்வொரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் தொடங்கி வைத்து வருகிறார். வேறெந்த பிரதமரும் இந்த அளவிற்கு ஒரு ரயில் சேவைக்கு முக்கியத்துவம் அளித்திருக்க மாட்டார்கள். மோடியின் கனவு திட்டம் என்று அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், இதுவரை 18 சேவைகளை தொடங்கியுள்ளது. அடுத்தகட்டமாக 39 சேவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைமுதல் ரயில் 2019 பிப்ரவரி 15ஆம் தேதி அன்று நியூ டெல்லி – … Read more

இது தார் ரோடு இல்ல தார்பாய்… ஒத்த கையால் சாலையை தூக்கிய ஊர் மக்கள் – வைரல் வீடியோ!

புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கிராம மக்கள் தங்கள் வெறும் கைகளாலேயே தூக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வினோதமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

”மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா பயனடையும்..” – டி.கே.சிவகுமார்..!

மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரு மாநிலங்களும் பயனடையும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், அத்திட்டத்தால், காவேரி படுகையில் விவசாயிகள் பாசனமும், பொதுமக்கள் குடிநீரும் பெறுவர் என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் டி.கே.சிவக்குமார் … Read more

கர்நாடகாவில் பயிற்சியின்போது ஐஏஎஃப் விமானம் விபத்து – பாராசூட் உதவியுடன் தப்பிய விமானிகள்

புதுடெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூர்ய கிரண் என்கிற பயிற்சி விமானம் கர்நாடகாவின் போகபுரா என்ற இடத்துக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானம் தரையில் மோதுவதற்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் விமானி உட்பட இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது. சூர்ய கிரண் ரக விமானங்கள், இந்துஸ்தான் ஏரோநாடிகல் … Read more

மணிப்பூர் கலவரம்: அமித் ஷா போட்ட உத்தரவு… ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தி ஆகிய இனக் குழுவினருக்கு இடையில் நடந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்துள்ளது. இது மாநிலம் தழுவிய அளவில் பரவி தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. போலீசார் தடியடி, கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டது என நிலைமை கைமீறி சென்றது. மணிப்பூரில் அமித் ஷா இங்கு முதலமைச்சர் என்.பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் … Read more