திருப்பதி தேவஸ்தானம் தேதி அறிவிப்பு… அடுத்த பிரம்மாண்டம் இங்க தானாம்… என்னென்ன சிறப்புகள்?

திருப்பதி கோயில் என்றாலே ஆந்திர மாநிலம் தான் அனைவருக்கும் நினைவில் தோன்றும். ஏழுமலைகளை தாண்டி சென்று திருமலையில் பக்தி பரவசத்துடன் வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு மொட்டையும், லட்டுமாக திரும்பும் பக்தர்கள் ஏராளம். இந்த கோயிலை நிர்வகித்து வருவது TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம். இதன் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ​திருப்பதி தேவஸ்தான கோயில்சில இடங்களில் ஏற்கனவே கோயில்கள் இருக்கின்றன. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் தியாகராய நகரில் … Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நானே தூக்குப்போட்டுக்கொள்வேன்… மல்யுத்த சங்க தலைவர் ஆவேசம்!

Wrestlers Protest In Delhi: தன் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், தானே தூக்கிட்டுக்கொள்வேன் என பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. 2 பேர் கைது..!

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாளை கடற்கரை பகுதிக்கு வந்த பைபர் படகு ஒன்றை சுற்றி வளைத்த அவர்கள், அதில் மறைத்து வைத்திருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோவுக்கும் அதிகமான உருக்கிய தங்கத்தை பறிமுதல் செய்தனர். கடத்தில் ஈடுபட்ட 2 … Read more

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு: மத்திய அரசுக்கு 5 நாள் கெடு

ஹரித்துவார்: ஹரித்துவார் மக்கள் விடுத்த வேண்டுகோளையேற்று, பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டத்தை கடைசி நேரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரைகைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் … Read more

"நீ தான் தைரியமான ஆளாச்சே.. சீனாவ அடிச்சுட்டு வா பார்ப்போம்".. மோடி அரசுக்கு ஒவைசி சவால்!

ஹைதராபாத்: “இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வருகிறது.. உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கள் ஸ்டிரைக் (துல்லியத் தாக்குதல்) நடத்திக் காட்டுங்க பார்ப்போம்” என்று மத்திய அரசுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார். பாஜகவை சித்தாந்த ரீதியாக மூர்க்கத்தனமாக எதிர்க்கும் சில அரசியல் கட்சிகளுள் ஒன்றாக ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி விளங்குகிறது. முதலில் தெலங்கானாவில் மட்டுமே அரசியல் செய்து வந்த ஒவைசி, தற்போது … Read more

‘தைரியமிருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துங்கள்’- பாஜகவுக்கு ஒவைசி சவால்

சங்காரெட்டி (தெலங்கானா): “உங்களுக்கு தைரியமிருந்தால் சீனாவின் மீது ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்துங்கள்” என்று பாஜகவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாவல் விடுத்துள்ளார். தெலங்கானாவின் பழைய நகரம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை தெரிவித்ததற்கு பதிலடியாக அசாதுதீன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஹைதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பண்டி சஞ்சை, “பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் … Read more

கடவுளுக்கே பாடம் கற்றுக் கொடுப்பவர் மோடி.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

நியூயார்க்: “நமது பிரதமர் நரேந்திர மோடியை கடவுள் அருகே கொண்டு சென்று அமர வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை கடவுளுக்கே விளக்கம் அளிப்பார்” என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார். கர்நாடகா தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தோடு அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. முதல் நாளான இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் … Read more

எல்லாம் தெரியும் என நினைப்பது நோய்… மோடி அப்படிப்பட்டவர் தான் – ராகுல் காந்தி

Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.

“மக்களை அச்சுறுத்துகிறது பாஜக” – அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சான் ஃபிரான்சிஸ்கோ: இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, “பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது … Read more

ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்!

தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க உள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை மழை பொழிவை கொடுக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் இந்த பருவமழை படிபடியாக முன்னேறி கேரளா, கர்நாடகா, … Read more