பாஜகவின் தேர்தல் வாக்குறுதி இது தான்..!! இலவச கேஸ் சிலிண்டர்,தினமும் அரை லிட்டர் பால் இலவசம்..!!

கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி உள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் … Read more

இந்தியாவில் புதிதாக 4,282 பேருக்கு கோவிட் – சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,246

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்பேது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 4.282 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 47,246 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் … Read more

3 இலவச சிலிண்டர், அரை லிட்டர் நந்தினி பால், ஃப்ரீ செக்-அப்… கர்நாடக பாஜகவின் தேர்தல் அறிக்கை இதோ!

தேர்தல் என்றாலே நமக்கு என்ன லாபம் என்ற பார்வை தான் மக்கள் மத்தியில் எழுகிறது. நேரடியாக தங்கள் கைகளுக்கு கிடைக்கும் சலுகைகள், அடிப்படை தேவைகளில் இலவசங்கள், தொலைநோக்கு திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு அம்சங்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவும். இதற்கு வரும் மே 10ஆம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் விதிவிலக்கல்ல. பாஜக தேர்தல் அறிக்கை இந்நிலையில் ’Praja Dhwani’ என்ற பெயரில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களின் குரல் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் பிரிவினைவாத அரசியலை பரப்ப முயற்சிப்பதாக முதல்வர் கண்டனம்..!!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது. தி … Read more

கர்நாடக தேர்தல் | "காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால்…" – மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை

ஷிமோகா: காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் கர்நாடக மக்கள் ஒன்றிணைய வேண்டும்; இல்லாவிட்டால் அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஷிமோகா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது மிகவும் … Read more

திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்: தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை! இந்தியாவிலேயே அதிகளவில் பக்தர்கள் படையெடுக்கும் ஸ்தலமாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். வழக்கமான நாள்களிலேயே மக்கள் கூட்டத்தில் நீந்தி தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் நாளுக்கு நாள் பக்தகர்கள் கூட்டம் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம்! இந்நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் 63-வது நிறுவன நாள்… பிரதமர் மோடி வாழ்த்து

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் 63-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இரு மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிறுவன நாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் மாநிலம் வளர்ச்சியை நோக்கி முன்னேறியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் 63-வது நிறுவன தினத்தையொட்டி மும்பையில் உள்ள ஹுதாத்மா சவுக்கில் சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே … Read more

மஜத வேட்பாளரிடம் மனுவை திரும்ப பெற பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது வழக்கு பதிவு செய்தது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: கர்நாடகாவில் மஜத வேட்பாளரிடம், வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறு பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் சோமண்ணா வருணா மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய இரு தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதில், சாம்ராஜ்நகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் (மஜத) சார்பில் மல்லிகார்ஜுனசாமி (எ) ஆலூர் மல்லு போட்டியிடுகிறார். Source link

முதலமைச்சர் அலுவலக உயர் அதிகாரி என்று கூறி மும்பை மாடல் அழகியை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபர் கைது!

குஜராத் முதலமைச்சரின் அலுவலக உயர் அதிகாரி என்று போலி நாடகமாடி மும்பை மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த மாடல் அழகியை ஏமாற்றியதாக வீராஜ் பட்டேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். வடோதராவில் மாடல் அழகியுடன் திரையரங்கில் படம் பார்க்க போன அவர் அங்கு ஒருவரிடம் தகராறு செய்த போது தன்னை முதலமைச்சர் அலுவலக அதிகாரி என்று கூறி … Read more

உ.பி பெண் ஒருவர் தன் குழந்தைக்கு மான் கீ பாத் என பெயர் சூட்டினார்..!!

பிரதமர் மோடியின் மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியின் 100-வது பகுதி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி அவர்களை கவுரவித்து வருகிறார். அவ்வாறு பாராட்டப்பட்டவர்களில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தை சேர்ந்த பூனம் என்ற பெண்ணும் ஒருவர். இவர் கழிவு வாழைத் தண்டுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகிறார். இதன் … Read more