உயிரிழந்த மகளின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுப்பு.. மோட்டார் சைக்கிளில் எடுத்துசென்ற தந்தை!

மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால், உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு தந்தை எடுத்து சென்றுள்ளார். தங்களது கிராமம் மருத்துவமனையிலிருந்து 15 கிலோ மீட்டருக்கு மேல் இருந்ததால், ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதாகவும், பண வசதி இல்லாததால் தனியார் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார். இதனிடையே, கிராமத்தை அடைய 20 கிலோ மீட்டர் இருந்த … Read more

மத சுதந்திரம் மோசமா? – அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா

புதுடெல்லி: “இந்தியாவில் மத சுதந்திரம் மோசடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை தவறானது; உள்நோக்கம் கொண்டது” என்று இந்திய வெளியுறவுத் துறை விமர்சித்துள்ளது. சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் … Read more

”முதலமைச்சர் பதவி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்” – டி.கே.சிவகுமார்

முதலமைச்சர் பதவி தொடர்பான வதந்திகளை, யூகங்களையும் நம்ப வேண்டாம் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் யார் என்பதில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அதற்கான போட்டியில் உள்ள சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் இன்று காலை ராகுல் காந்தியுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவியுடன் 6 முக்கிய அமைச்சர் பொறுப்புகள் அல்லது, இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என இரு வாய்ப்புகள் டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், … Read more

அசாமின் 'லேடி சிங்கம்’ போலீஸ் சாலை விபத்தில் உயிரிழப்பு: மரணத்தில் குடும்பத்தினர் சந்தேகம்

குவாஹாட்டி: அசாமின் ‘லேடி சிங்கம்’ , ‘தபங் காப்’ என்றழைக்கப்பட்ட பெண் துணை காவல் ஆய்வாளர் ஜன்மொய் ரபா சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அசாம் மாநிலம் மோரிகோலாங் காவல் சோதனைச் சாவடியின் பொறுப்பாளரான ஜன்மொய் ரபா நேற்று காலை கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் நகோன் மாவட்டத்திற்கு அவருடைய காரில் காவல் சீருடை இல்லாமல் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவர் காரின் மீது டிரக் மோதியதில் அவர் … Read more

Sanchar Saathi: சைபர் ஸ்வச்தா கேந்திராவின் சஞ்சார் சாத்தி விழிப்புணர்வு போர்டல்

Cyber Safety: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்தும் மத்திய அரசின் போர்டல் சஞ்சார் சாத்தி 

விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, யூரியாவுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயும்,  டி அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாயும் அரசு செலவிடும் என தெரிவித்தார். மேலும், அனைத்து முக்கிய உரங்களுக்கான இருப்பு தேவையான அளவில் இருப்பதாகவும், நாட்டில் உரத்தின் விலை உயராது என்றும் அவர் குறிப்பிட்டார். … Read more

நாளை பிற்பகல் பதவி ஏற்கிறார் சித்தராமையா?

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா நாளை பிற்பகல் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ், அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால், அடுத்த முதல்வர் யார் என்பவதில் குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். எனவே, அடுத்த முதலமைச்சராக யாரை அறிவிப்பது என்பது குறித்து டெல்லியில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராகுல்காந்தியின் இல்லத்தில் முதலில் … Read more

டி.கே.சிவகுமாரின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிப்பு – சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.கே.சிவகுமாரின் சொந்த மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் அம்மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரையும் டெல்லிக்கு அழைத்து, அவர்களுடன் காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் தனித்தனியே சந்தித்து … Read more

DK Shivakumar Disproportionate Assets Case: டி.கே.சிவகுமாருக்கு எதிரான மனு.. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்

Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

காங். முன்னாள் எம்.பி., ராகுல்காந்தி அமெரிக்கா பயணம்..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பத்து நாள்கள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி, ஜூன் 4ஆம் தேதி நியூ யார்க்கின் மாடிசன் சதுக்க தோட்டத்தில், சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் பேரணியை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர, ராகுல், வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று, ஸ்டேன்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றவிருக்கிறார். அமெரிக்க பயணத்தின்போது அவர் அந்நாட்டு … Read more