மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை நோக்கி, இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயன்ற போது … Read more

#JUST IN : 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

இன்று நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டும்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் இன்று 75 ரூபாய் காயின் வெளியிடப்பட்டது. மத்திய அரசு மூலம் வெளியிடப்படும் நினைவு நாணயம் ஆகும். முக்கிய தலைவர் அல்லது தனிநபர் அல்லது நினைவுச்சின்னத்தை கொண்டாடுவதற்காக நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நினைவு நாணயங்கள் உள்ளன.ஆனால் இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தில் புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் … Read more

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன், 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தை அதிநவீன வசதிகளுடன் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டி முடித்துள்ளது. இதில் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை … Read more

செங்கோல் தற்போது தான் உரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இன்று  பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி ​​இந்தியாவின் புதிய பாராளுமன்றம் எவ்வாறு கனவுகளை நனவாக்கும் என கூறினார்.

நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட்

தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ் – 01 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.’ போல், இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக ‘நேவிக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கப்படுகிறது. அதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ, 1பி, 1சி, 1ஜி உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டன. கடைசியாக 2018ஆம் ஆண்டில் 1ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 1ஜி செயற்கைக் கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. … Read more

புதிய நாடாளுமன்றத்தின் 10 சிறப்பம்சங்கள் ஒர் பார்வை..!!

1. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2. எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், உணவு சாப்பிடும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. 3. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது. 4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கியான் … Read more

பப்ஜி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை முதல் விளையாடலாம்..!

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிரப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் … Read more

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா: புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் … Read more

மதிய உணவில் 8 அடி பாம்பு… அலறிய அரசு பள்ளி மாணவர்கள்.. 110 பேருக்கு சிகிச்சை

அராரியா மாவட்டத்தின் அமவுனா கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. நடுநிலை பள்ளியாக இருந்த வந்த இப்படி அண்மையில்தான் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடந்த சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கு வழக்கம்போல மதிய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது. இந்த உணவை சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மேலும் 98 மாணவர்கள் கிச்சடிக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, பாத்திரத்தில் இருந்து கிச்சடியை அள்ளியபோது 8 அடியில் பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. … Read more

ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ”பிஎஸ்எப்” படையினர்…!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்கள் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. குர்ட் மாவட்டம் தனோவா கிராமத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் நேற்றிரவு ஆளில்லா டிரோன் பறப்பதை கண்டுபிடித்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் நொறுங்கி விழுந்த டிரோனை  எடுக்க பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அங்கிருந்து 3 பேர் ஓடுவதை பார்த்து விரட்டிச் சென்று ஒருவனை … Read more