முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது முழு நம்பிக்கை – டி.கே.சிவகுமார்!

முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற அவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரிலேயே பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். கட்சிக்கு துரோகம் செய்வதோ, மிரட்டுவதோ தனது பாணி அல்ல எனக்குறிப்பிட்ட அவர், மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். நூற்றுக்கும் அதிமான … Read more

கர்நாடக முதல்வர் பதவி இழுபறி | “முதுகில் குத்தமாட்டேன்” – டெல்லி செல்லும் முன்பு டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு: “பதவியை பெறுவதற்காக முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன்” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியாக இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நிலவி … Read more

காங்கிரசை ஆதரிக்க தயார் : மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று காங்., ஆட்சி அமைக்க உள்ளது. 2024-ல் வரவுள்ள லோக்சபா தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில்., காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் செல்வாக்குடன் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் ஆதரவு அளிப்போம். அதே நேரம் எங்கெல்லாம் மாநில கட்சிகள் செல்வாக்கு உள்ளதோ அங்கு காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும். நான் கர்நாடகாவில் காங்கிரசை … Read more

டெல்லி – கொல்கத்தா பயண நேரம் 17 மணியாக குறையும்

வாரணாசி: வாரணாசி – கொல்கத்தா இடையே 610 கி.மீ. தூரத்துக்கு பசுமை விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த விரைவுச் சாலை பணிகள் 2026-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வாரணாசி – கொல்கத்தா இடையிலான பயணம் பெரும்பாலும் என்.எச்.19 வழியாக நடைபெறுகிறது. இதன் பயண நேரம் 12 முதல் 14 மணி நேரம் ஆக உள்ளது. புதிய விரைவுச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இந்த நேரம் 6 முதல் … Read more

அடடே… ரயில்வே நிலையங்களில் வரும் சூப்பர் வசதி… என்னன்னு பாருங்க!

பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிலையங்களில் சைன் போர்டுகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்கள்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில் போக்குவரத்தை நம்பி ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்யும் ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான … Read more

திருட்டு போன மொபைல் போனை கண்டறிய புதிய இணையதளம்: நாளை அறிமுகமாகிறது..!!

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் நாளை (மே 17ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு, சஞ்சார் சாதி என்ற பெயரில் புதிய பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, மக்கள் தொலைந்த அல்லது திருட்டு போன மொபைல் போன் குறித்த விவரங்களை அளித்து, அதனை கண்டறிய உதவி பெற முடியும். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், www.sancharsaathi.gov.in என்ற புதிய இணையதள சேவையை துவங்கி வைக்க … Read more

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் … Read more

அழகு கொஞ்சும் பசுமை பள்ளத்தாக்கு! காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்

Film Tourism In Kashmir Valley: ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பள்ளத்தாக்கில் திரைப்பட சுற்றுலாவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக 300க்கும் மேற்பட்ட புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அசோக் கெலாட் அரசுக்கு 15 நாள் கெடு விதித்தார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கும் அசோக் கெலாட் அரசுக்கும் சச்சின் பைலட் இம்மாத இறுதிவரை கெடு விதித்துள்ளார். ஊழலுக்கு எதிராகவும் வேலைவாய்ப்புக்கான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகவும் ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் சச்சின் நடைபயணம் மேற்கொண்டார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான 125 கிலோ மீட்டர் நடைபயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமது கோரிக்கைகளை இம்மாத இறுதிக்குள் ஏற்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என சச்சின் … Read more

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டதா ? இனி கவலை வேண்டாம்..!!

டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விரைவில் அறிமுகம் ஆகும் இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டியது என்னவென்றால், CEIR இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை … Read more