"ராகுல் காந்தி பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்" – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், மக்கள் பிரதமர் பக்கம் இருப்பதால் ராகுல் காந்தியால் அதில் வெற்றி பெற முடியாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2019-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ராகுல் காந்தி, பிரதமரின் மிகப்பெரிய பலமே அவர் மீது இருக்கும் ‘இமேஜ்’ தான், அதை நான் கிழித்தெறிவேன் … Read more

புதிய நெருக்கடி: அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்கு விலை கடும் சரிவு..!!

மும்பை: அதானி குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. விலை சரிந்து கொண்டிருக்கும் அதானி குழும பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்ததாக சர்ச்சை எழுந்தது. அதானி நிறுவனப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு இழப்பு என புகார் தெரிவிக்கப்பட்டது. அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள இ.பி.எஃப். தொகையைத் திரும்ப பெறுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி … Read more

இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை 200 எம்.பி., எம்எல்ஏ.க்கள் தகுதி இழந்துள்ளனர்

புதுடெல்லி: இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை, பல்வேறு காரணங்களுக்காக 200 எம்.பி., எம்.எல்ஏக்கள் தகுதி இழந்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் அரசியல் சாசன சட்டப்படி, ராகுல் காந்திக்கு நீதிமன்றம்தான் … Read more

பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் 11-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

டெல்லி: தொடர்ந்து 11-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் காணிக்கை

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதத்தில் தமது அதிகாரிகளுக்கு எலக்ட்ரிக் கார்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத் மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் பஸ் ரூ.1.8 கோடி வீதம் ரூ.18 கோடி செலவில் மொத்தம் 10 எலக்ட்ரிக் சொகுசு பஸ்களை வழங்கியது. அவற்றை திருமலை கோயில் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் அவற்றுக்கான … Read more

7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்…மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசு அவர்களது மனதை குளிர்விக்கும் வகையில் பல நல்ல செய்திகளை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இது தவிர பழைய ஊதியத் திட்டத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய ஓய்வூதிய முறையிலும் … Read more

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

ஏன் பயப்படுகிறீர்கள்? – ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்ஐசி, எஸ்பிஐ வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் ஓய்வூதிய பணம் கூட அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒய்வூதிய பணத்தை ஏன் அதானிக்கு வழங்க வேண்டும். ‘மோதானி’ தொடர்பு பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு கூட, இபிஎப்ஓ பணம் அதானிக்கு வழங்கப்படுவது ஏன்? இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை; … Read more

பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு

டெல்லி: பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. பி.எஃப் வட்டி வட்டி உயர்வால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.