பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய திருவாடுதுறை ஆதீனம்…!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: டெல்லி வந்த பல ஆதீன குருமார்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை (மே 27) செங்கோலை ஒப்படைத்தனர். 

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல்..!

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல் தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீன கர்த்தாக்கள் பிரதமரிடம் தங்கச் செங்கோலை ஒப்படைத்தனர் திருவாவடுதுறை மற்றும் மதுரை ஆதீனங்கள் ஆளுக்கொரு செங்கோலை வழங்கினர் செங்கோல்களை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் Source link

நாளை திறப்பு விழா காண்கிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த … Read more

இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்..!

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செங்கோட்டையில் உள்ளது போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்கள், ராஜஸ்தானின் சர்மதுரா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நாக்பூரில் இருந்து தேக்கு மரங்களும், உதய்பூரில் இருந்து பச்சை நிற சலவைக் கற்களும், ராஜஸ்தானின் அம்பாஜியில் இருந்து வெள்ளை நிற சலவை கற்களும் கொண்டு வரப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வைக்கப்பட்டுள்ள அசோக சக்கரம் இந்தூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி ஒரே பாரதம் உன்னத … Read more

ஊதியம் கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல்!!

4 மாதம் ஊதியம் வராததால் அதனை கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன ஒப்பந்தம் மூலம் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த … Read more

வவ்வால் வைரஸ் உருவாக வாய்ப்பு!! பீதியில் மக்கள்!!

சீனாவில் கொரோனா பரவிய அதே இடத்தில் வவ்வால் வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே உலுக்கிய கொரோனாவை யாராலும் மறக்க முடியாது. வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வெவ்வெறு உருமாற்றங்களில் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் உள்ளது. கொரோனா வைரஸின் ஊற்றாக கருதப்படும் சீனாவில், ஓமைக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் (XBB omicron subvariants) மீண்டும் பரவி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் … Read more

டெல்லி அவசரச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுங்கள்: மத்திய அரசுக்கு தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தலைநகரான புதுடெல்லி யூனியன் பிரதேசத்தின் காவல் துறை, சேவைத் துறை, நிலம் தொடர்பான அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், சட்டப்படி காவல் துறை தவிர்த்த பிற … Read more

#9YearsOfPMModi: கடமையாற்ற ஊக்கம் அளிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

9 Years Of Modi Government:  ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு, அடுத்த பொதுத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றபோது, எந்தவித எதிர்கேள்வியும் இல்லாமல், மீண்டும் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி மகுடம் சூடியது

“மக்களால்தான் சாதனைகள் சாத்தியமாகின. ஏனெனில்…” – 9 ஆண்டு ஆட்சி குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி: “முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையான அரசை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால் எங்களின் சாதனைகள் சாத்தியமாகின. இந்த இணையற்ற ஆதரவு பெரும் பலத்திற்கு ஆதாரமாக உள்ளது” என்று பிதரமர் மோடி தெரிவித்துள்ளாார். ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ குறித்த பொது மக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து, அவற்றுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “காலையில் இருந்து, ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ பற்றிய பல ட்விட்டர் … Read more

பாக்கவே மூச்சு முட்டுதே.. ரயில் பரிதாபம்… பாவம் மும்பை பெண்கள்..!

சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள புறநகர் ரயில் நிலையங்கள் காலையிலும், மாலையிலும் பிசியாக காணப்படும். குறிப்பாக மும்பை ரயில் நிலையத்திற்குள் காலை நேரத்தில் மற்றவர்களை உரசாமல் நுழையவே முடியாது. ரயிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தை சற்று தள்ளி நின்று பார்த்தால் தேனீக்களை போலதான் இருக்கும். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக காத்திருக்கும் பெண்களையும், வரும் ரயிலில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிவதையும் பார்க்கவே … Read more