கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, சிவக்குமார் இடையே கடும் போட்டி

கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை 135 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் ஒப்படைத்து ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதிதாகத் தேர்வான எம்.எல்ஏக்களுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பு ஆதரவாளர்களும் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே நின்று கோஷமிட்டனர். இரு தரப்பினரிடையே சுவரொட்டி யுத்தமும் … Read more

இம்மாத இறுதிக்குள் கோரிக்கையை ஏற்க வேண்டும்: ராஜஸ்தான் அரசுக்கு சச்சின் பைலட் கெடு

ஜெய்ப்பூர்: தனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட நடைபயணம் இன்று நிறைவடைந்தது. ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த வியாழக்கிழமை நடைபயணத்தைத் தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நிறைவு செய்தார். இந்த 5 நாள் நடைபயணத்தின்போது தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் அவர் நடந்து … Read more

காங்கிரஸ்-க்கு ஆரம்பித்த தலைவலி.. நீதிமன்றம் சம்மன்.. டெரர் அமைப்பை நோண்டியதால் வினை.!

இந்துத்துவ அமைப்பை அவமதித்தாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடகா தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. அதையடுத்து மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்க உள்ளது. அதேபோல் பாஜக 66 இடங்களில் வென்று எதிர்கட்சியாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் … Read more

2024 களத்தில் காங்கிரஸை TMC ஆதரிக்கும்… ஆனால்… நிபந்தனை போடும் மம்தா பேனர்ஜீ!

மம்தா பானர்ஜியின் மிஷன் 2024 ஃபார்முலா: காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி  இந்த இடங்களில் அவர்கள் போட்டியிட, அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்கிறார். ஆனால் அவர் நிபந்தனையும் விதித்துள்ளார். 

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவிற்கு ஆதரவு..? டெல்லி பயணத்தை ரத்து செய்த டி.கே.சிவகுமார்..

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி நிலவும் சூழலில், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களில் வென்று காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பெற்றபோதிலும், முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், கட்சி மேலிட அழைப்பை தொடர்ந்து சித்தராமைய்யா டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டி.கே.சிவகுமாரும் டெல்லி செல்லவிருந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாடிய அவர், வயிற்று பிரச்சனை காரணமாக பயணத்தை ரத்து செய்ததாக அறிவித்துள்ளார். ஒக்காலிக்கா … Read more

“இந்துத்துவா என்பது தர்மம் அல்ல; குண்டர்களின் கூட்டம்தான் பஜ்ரங் தளம்” – திக்விஜய சிங் விமர்சனம்

ஜபல்பூர்: இந்துத்துவா என்பது தர்மம் அல்ல என்றும், சனாதனம்தான் தர்மம் என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், குண்டர்களின் கூட்டம்தான் பஜ்ரங் தளம் என விமர்சித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங் ஜபல்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சனாதனம்தான் நமது தர்மம். இந்துத்துவத்தை நாங்கள் தர்மமாகக் கருதுவதில்லை. ஏற்காதவனை … Read more

அதானி குழுமம் மீதான ஆய்வறிக்கையை தாக்கல் செய்த செபி..!

2016 ஆம் ஆண்டு முதல் அதானி குழுமத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் செபி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் எழுப்பிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வரும் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேலும்,  உலகளாவிய வைப்புத்தொகை ரசீது (Depository Receipts) வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்ட 51 நிறுவனங்களில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனமும் … Read more

எனது தலைமையில் காங்கிரஸ் 135 இடங்களை வென்றுள்ளது: டி.கே. சிவகுமார்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை தனது தலைமையில் எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவருமான டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. எனினும், முதல்வர் பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும், மூத்த தலைவர் சித்தராமையாவும் போட்டி போடுவதால், இறுதி முடிவை கட்சித் தலைமை … Read more

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!

கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023: கர்நாடகாவில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

ஆந்திராவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

ஆந்திராவில் அனந்தபுரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் தாடி பத்ரி பகுதியைச் சேர்ந்த 12 பேர், திருப்பதி கோவிலுக்கு ஒரே காரில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அனந்தபுரம்-சித்ராவதி நதி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில், கார் உருக்குலைந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், … Read more