சத்தீஸ்கர் | மொபைல் போனுக்காக அணையில் இருந்த 41 லட்சம் லி. நீரை வெளியேற்றிய அதிகாரி

கோயிலிபேடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அணை ஒன்றில் தவறவிட்ட தனது மொபைல் போனை தேடி எடுக்க விவசாய பாசனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 41 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார். அணையில் இருந்த நீரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெளியேற்றிய பின்னர் அந்த அதிகாரி தனது போனை கண்டெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தின் கெர்கட்டா அணையில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபெடா வட்டத்தில் உணவு அதிகாரியாக பணியாற்றி வரும் … Read more

விவசாயிகளுக்கு நல்ல சேதி! பிஎம் கிசான் யோஜனா 14வது தவணை எப்போ கிடைக்கும்?

Farmers scheme By Centre: பிஎம் கிசான் யோஜனா மூலம் ஜூன் 26 முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் பரிமாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன  

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம்..!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. 65 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். முக்கோண வடிவில் 4 தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் உட்புற அமைப்பு, தாமரை, மயில் மற்றும் ஆலமரம் உள்ளிட்ட தேசிய சின்னங்களை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஞானம், சக்தி, கர்மா ஆகிய மூன்று வாயில்களை கொண்ட நாடாளுமன்ற கட்டடத்தில், இரு அவைகள் மட்டுமின்றி எம்பிக்களுக்கான … Read more

“ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை” – புதிய நாடாளுமன்ற உட்புறத் தோற்ற வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒவ்வோர் இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அதிகாரபூர்வ முதல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒவ்வோர் இந்தியரையும் பெருமைப்படுத்தும். சிறப்பு வாய்ந்த கட்டிடத்தின் சிறு காட்சியை இந்த வீடியோ வழங்குகிறது. முக்கிய வேண்டுகோளை உங்களிடம் நான் வைக்கிறேன். இந்த வீடியோ உடன் உங்கள் கருத்துகளை ஒலிக்கோவையாக சேர்த்து … Read more

பொருளாதாரம் முதல் சமூக நீதி வரை: 9 ஆண்டு ஆட்சி குறித்து மோடிக்கு காங்கிரஸ் முன்வைத்த 9 கேள்விகள்

புதுடெல்லி: நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை முன்வைத்துள்ளது. பொருளாதாரம்: பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ஏன்? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையிலும் பொதுச் சொத்துக்களை உங்கள் நண்பர்களுக்கு விற்பனை செய்தது ஏன்? விவசாயம் மற்றும் விவசாயிகள்: மூன்று “கருப்பு” விவசாய சட்டங்களை ரத்து செய்யும்போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் … Read more

திருப்பதிக்கு திடீரென படையெடுக்கும் பக்தர்கள்… காரணம் தெரியுமா?

திருப்பதி ஏழு மலையான் கோவிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதிஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிலிலும் இல்லாத அளவுக்கு ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை குவிந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பு வார இறுதி நாட்களில் அதிகளவு கூட்டம் காணப்பட்ட நிலையில் தற்போது வார நாட்களிலேயும் அதிகரித்து வருகிறது.​ … Read more

சோழ காலத்து செங்கோல்: போலியா… சுதந்திர அடையாளமா… – தலைவர்கள் சொல்வது என்ன?

New Parliament Building Sengol: புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகரின் இருக்கையின் அருகே நிறுவப்படும் அறிவிக்கப்பட்ட ‘சோழ காலத்து செங்கோல்’ குறித்த சர்ச்சையின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

ககன்யான் திட்டம்.. இஸ்ரோவுடன் இணைந்து செயலாற்றும் இந்திய கடற்படை..!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களுக்கான மீட்பு காப்சூலை, மீட்பு குழுக்களின் பயிற்சிக்காக இந்திய கடற்படையிடம், இஸ்ரோ ஒப்படைத்தது. ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. கொச்சியில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி முதல் வீரர்கள் பயணிக்கும் காப்சூலை மீட்பது குறித்த பயிற்சியை இஸ்ரோ தொடங்கியது. இந்நிலையில், மீட்பு பயிற்சியில் இஸ்ரோவுடன் இணைந்து இந்திய கடற்படையும் செயலாற்றவுள்ளது. இதுகுறித்த பயிற்சி திட்ட ஆவணத்தை கடந்த 24-ம் தேதி, … Read more

நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு | அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை உண்டு: ஜெய்சங்கர் காட்டம்

ராஜ்பிப்லா(குஜராத்): புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எதிர்க்கட்சிகளின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை உள்ளது” என்று காட்டமாக கூறியுள்ளார். குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளார். நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். இதில் சர்ச்சையை … Read more

காங்கிரஸ் கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால்: பாதை அமைத்து தரும் பாஜக

அவசர சட்டத்தின் மூலம் காங்கிரஸ் உடன் அரவிந்த் கெஜ்ரொவாலின் ஆம் ஆத்மி கட்சி இணைந்து செயல்பட ஒன்றிய பாஜக அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் … Read more