கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் – 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: கர்நாடகாவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்எல்ஏவாக … Read more

ஆத்தி… கேப் புக் பண்ணா கிறுகிறு… அப்படியே ஃப்ளைட் டிக்கெட் காசு… ஆடிப் போன பெங்களூருவாசி!

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வாடகை கார்கள் (Cabs) பயன்பாடு அதிகரித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள் முதல் தினசரி வேலை, வெளியூர் செல்பவர்கள் வரை பலரும் கேப்பில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கேப் இல்லாத சூழலை பலரால் ஜீரணிக்கவே முடியாது. வாடகை கார் பயணம் இது மேல் நடுத்தர வர்க்க மற்றும் உயர் வகுப்பை சேர்ந்தவர்களின் தினசரி பயன்பாட்டில் ஒன்றாக மாறிப் போய்விட்டது. ஆனால் பீக் ஹவர் (Peak Hours), … Read more

75 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு!!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை ஒட்டி மத்திய அரசு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் … Read more

உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதுடெல்லி: உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் பாஜகவினர் உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கரோனா பெருந்தொற்று … Read more

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்ய வைப்பர் ரோவர் விண்கலத்தை அனுப்புகிறது நாசா..!

நிலவின் மேற்பரப்பில் நீர் உள்ளதாக என்பதைக் கண்டறிய நாசா ரோவர் விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. 1972 க்குப் பிறகு முதன்முறையாக விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்ப நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. நாசாவின் VIPER எனப்படும் ரோவர் விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பில் பனி அல்லது நீர் இருப்பு குறித்து ஆராயப்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது. … Read more

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி தங்க நகைகள்!!

சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதற்குள் சென்ற காரில் இருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் … Read more

அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது செங்கோல்: புதிய நாடாளுமன்றத்தில் 28-ம் தேதி நிறுவப்பட உள்ளது

புதுடெல்லி: அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடந்த 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. அப்போது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சோழர்கால மாதிரி செங்கோல் வழங்கப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர் பதவி ஏற்கும்போது அவரிடம் செங்கோலை ஆன்மிகத் தலைவர் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே சோழர் கால மாதிரி செங்கோல் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை 28ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி… ஹோமம், பூஜைகளுடன் காலையில் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி…!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். மகாத்மா காந்தி சிலை அருகில் காலை 7.30 மணிக்கு சிறப்புபூஜைகள் நடைபெற உள்ளன.  தமிழ்நாட்டின் சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்குகின்றனர். இந்த செங்கோல் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு  மக்களவையின் உள்பகுதியில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்படுகிறது. இரண்டு குறும்படங்கள் திரையிடல், நினைவு நாணயம் தபால் தலை வெளியீடு, நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களை கௌரவப்படுத்துதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற … Read more

பரவும் புதிய வகை கொரோனா… பீதியில் மக்கள்!!

புதிய வகை கொரோனாவால் வாரத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனா பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்தது. சீனாவில் தொடங்கினாலும் மற்ற நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதே தவிர, சீனாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. தங்கள் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா கூறியது. ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், சீனாவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீரியம் மிக்க புதிய … Read more