உமேஷ் பால் கடத்தல் வழக்கு: உ.பி கேங்ஸ்டர் அக்திக் அகமதுக்கு ஆயுள் தண்டனை

பிரயாக்ராஜ்: உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்எல்ஏவுமான அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்திக், தினேஷ் பாஸி, கான் சவுகத் ஆகிய மூன்ற குற்றவாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அக்திக் அகமதுவின் சகோதரர் காலீது அசீம் உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். முன்னதாக அக்திக் அகமது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் … Read more

”பாஜக வளர வளர எதிர்க்கட்சியினரின் தாக்குதல் அதிகரிக்கும், ஆதலால் வலுவான எதிர்தாக்குதலுக்கு தயாராக வேண்டும்..” – பிரதமர் மோடி..!

பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் அதிகமாக இருக்குமென்றும், ஆதலால் வலுவான எதிர்தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டுமென்று பாஜக தலைவர்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி பெற்று தந்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, மத்தியில் பாஜக ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் … Read more

ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின்கீழும் அங்கீகரிக்கவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின்கீழும் அங்கீகரிக்கவில்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது ஸ்ரீநகர் – ஜம்முவை இணைக்கும் ரயில்வே பாலம்!

ஆங்கிலேயரால் இந்தியாவிற்கு ரயில் தடங்கள் அமைந்தாலும் இந்திய அரசாங்கமானது அதை விரிவு படுத்தி மக்களுக்கு பயணம் சுலபமாகும் வரையில் பல்வேறு விதங்களில் வழி தடங்களை அமைத்து பயணத்தை எளிமை படுத்தி வருகிறது. அதன் படி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இந்திய ரயில்வே துறை அமைத்துள்ளது. இது வருகின்ற மே மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் … Read more

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை கூடிய சில நிமிடங்களிலேயே அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. … Read more

சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020 ஜூனில் லடாக் எல்லை பகுத்தியில் நடந்த மோதல்களில் 20 இந்திய வீரர்களும் ஏராளமான சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து ஒரு நாட்டு உறவுகள் கடும் பதிப்பிற்குள்ளானது. டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தியா தடை விதித்தது. சீன நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் நேரடி முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த … Read more

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மோடி பெயர் குறித்த அவதூறு தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த வாரத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ராகுல் காந்தி தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இன்று காலையில் ராகுல் காந்தி மீது பாஜக புதிய … Read more

சபரிமலை ஐயப்பனை தரிசித்து திரும்பிய தமிழக பக்தர்களின் பேருந்து விபத்து!

சபரிமலையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக பக்தர்கள் பயணித்த பேருந்து, நிலக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில்  விழுந்து விபத்துக்குள்ளானது. தமிழகத்தைச் சேர்ந்த 64 பேர் கொண்ட பக்தர்கள் குழு சபரிமலையில் தரிசனம் முடித்து சொந்த ஊருக்கு திரும்பும் வலையில் கேரளா மாநிலம் நிலக்கல் அருகே நண்பகல் 1 மணியளவில் விபத்து நடைபெற்றது. இலவுங்கலுக்கும் கானமலக்கிற்கும் இடையில்  நாரணம் ஓடைக்கு அருகில் பேருந்து வந்து கொண்டிருந்த பொது, ஓட்டுனரின் கட்டுப்பாட்ஃபில் இருந்து விலகிய பேருந்து பள்ளத்தில் … Read more

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் – அமித்ஷா

இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது உள்ளிட்ட 2 இலக்குகளை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நிர்ணயித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ASSOCHAM’s அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது, 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது ஆகிய 2 இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார். இந்த 2 இலக்குகளையும் நம்மால் நிச்சயம் அடைய முடியும் … Read more

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது. ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்திருந்தது. தற்போது ரூ.1000 அபராத கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பான் கார்டை … Read more