செங்கோல் வரலாற்றை நினைவுகூர்ந்த ‘மகா பெரியவர்’

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதில் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானது. ஆனால், அது வரலாற்றில் முக்கிய அம்சமாக இடம் பெறவில்லை. கடந்த 1978-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில், இந்த செங்கோல் கதையை எடுத்துக் கூறினார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப்பட்டார். இந்த கருத்து இவர் கடந்த 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. … Read more

மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறைச் சம்பவங்கள்.. போலீசார் குவிப்பு..!

மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இம்பால் மேற்கு மாவட்டம் கடங்காபாத்தில் மூன்று இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சில ஆயுதமேந்திய விஷமிகள் குன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதில் ஒருவர் விரல் சேதம் அடைந்தது. எல்லைப் பாதுகாப்புப் படையினரும், மணிப்பூர் போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார் Source link

ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்

லக்னோ: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற் காக ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞரின் பைக்கை உ.பி. மாநில போலீஸார் பறிமுதல் செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி போலீஸ் சரகத்துக்குட்பட்ட யூடியூபர் ஒருவரின் பைக்கை போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். அவர் ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்து அதை மற்றொருவர் மூலம் வீடியோவில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே கடந்து சென்றனர். இதைப் பார்த்த கவுதம் பள்ளி போலீஸ் … Read more

தரையிறங்கியவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்.. பயணிகள் பதற்றம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் உடனே மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது. இதனால் சில நிமிடங்களுக்கு விமானத்தில் இருந்த பயணிகள் குழப்பமடைந்தனர். திங்கள்கிழமை இரவு சுமார் 100 பயணிகளுடன் சண்டிகரிலிருந்து அகமதாபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சர்தார் படேல் சர்வதே விமான நிலையத்தின் ஓடுபாதையில் அன்றிரவு 8.45 மணியளவில் தரையிரங்கியது. இரவு 9.15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானம் தரையிறங்கியதும் சட்டென்று திரும்பவும் பறக்க ஆரம்பித்ததால் குழப்பம் … Read more

கர்நாடக பேரவை தலைவராக யு.டி.காதர் தேர்வு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தலைவராக யு.டி.காதர் தேர்வு செய்யப்படுள்ளார். கர்நாடகாவில் கடந்த 20-ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டார். அவரது முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதில் பெரும்பாலானோர் கடவுளின் பெயராலும் அரசியலமைப்பு சட்டத்தின் பெயராலும் பதவியேற்றனர். இந்நிலையில் பேரவைத் தலைவர் பதவிக்கு மங்களூரு எம்எல்ஏ யு.டி.காதர் (54) நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக, மஜத தரப்பில் யாரும் வேட்பு … Read more

“நாடு முழுவதும் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டது” – இந்திய வானிலை ஆய்வு மையம் இனிப்பான தகவல்

நாடு முழுவதும் இன்றுடன் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய விஞ்ஞானி ஜெனாமணி, இன்று முதல் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்குமென்றும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுமென்றும் கூறினார். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சண்டீகர் மாநிலங்களுக்கு சூறாவளி காற்று மற்றும் மழை அதிகம் பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருப்பதாகவும், மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் … Read more

சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கியது | புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: சுதந்திரத்தின்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால மாதிரி செங்கோலை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர நிறுவ உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் … Read more

வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் குஜராத்தில் கைது

அகமதாபாத்: குஜராத் காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை டிஐஜி தீபன் பத்ரன் நேற்று முன்தினம் கூறியதாவது: அகமதாபாத்தின் ஓதவ் மற்றும் நரோல் பகுதிகளில் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் முகமது சோஜிப், முன்னா காலித் அன்சாரி, அசாருல் இஸ்லாம் அன்சாரி, மொமினுல் அன்சாரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நால்வரும் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞர்களை அல்-காய்தா அமைப்பில் சேருமாறு ஊக்குவித்து … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி: வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம், சிபிஐ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் … Read more

‘சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்’ – அமைச்சரின் பேச்சால் டி.கே.சிவகுமார் அதிருப்தி

பெங்களூரு: கர்நாடகவின் முதல்வராக சித்தராமையாவே 5 ஆண்டுகளுக்கும் நீடிப்பார் என அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேசியதால், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் அளித்த ரகசிய வாக்குறுதிகளின் அடிப்படையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார். சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என தகவல் … Read more