விபத்தில் சிக்கி பிரபல இளம் நடிகை மரணம்!!

ஹிந்தி நடிகை வைபவி உபாத்யாயா, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவி உபாத்யாய் (32) கடந்த 2017ஆம் ஆண்டு சாராபாய் vs சாராபாய் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் ஜாஸ்மின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் அவர் இந்தி சின்னத்திரையுலகில் பிரபலமானார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடர் மூலம் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. பல பிரபலமான இந்தி தொடர்களில் நடித்த இவர், திரைப்படத்திலும் நடித்தார். தீபிகா படுகோன் நடிப்பில் … Read more

முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்!!

லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி (85) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த அரசியல் தலைவரான மனோகர் ஜோஷி , மும்பை மேயராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தார். அவர் 1995 முதல் 1999 வரை முதல்வராகவும், பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார். மகாராஷ்டிராவின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் இவர்தான். சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளிகளில் … Read more

‘ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை…’ – நாடாளுமன்ற விவகாரம் குறித்து ராகுல் காந்தி 

புதுடெல்லி: “நாடாளுமன்றம் ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை, மாறாக அது அரசியலமைப்பு விழுமியங்களால் கட்டப்பட்டது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியில் உள்ள அந்தப் பதிவில் அவர், “புதிய … Read more

”டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வம்” – எலான் மஸ்க்

டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வத்துடன் உள்ளதாக அந்நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இந்தாண்டின் இறுதியில் புதிய தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சியாக மெக்சிகோவில் தனது ஆலையை திறக்கப்போவதாக டெஸ்லா ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தியாவில் தமது உற்பத்தி தளத்தை நிறுவுவதற்காக டெஸ்லா நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் அண்மையில் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தது … Read more

வாட்ஸ்அப்பில் மெசேஜை எடிட் செய்யும் அம்சம் அறிமுகம்..!!

வாட்ஸ்அப் தளம் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், பல தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தனித்துவமான அம்சத்தை வழங்கும் விதமாக மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகமாக்கி உள்ளது. அதில் பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜின் சாட்-டை … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | ஒருவர் பலி, இருவர் படுகாயம் – ஊரடங்கு ரத்து

இம்பால்: மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர். மணிப்பூரில் இம்மாத தொடக்கத்தில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும், பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை மேம்பட்டு வந்ததை அடுத்து, மணிப்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஷ்னுபூர், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலை … Read more

சீனாவை சமாளிக்க.. உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்.. என்ன அது?

புதுடெல்லி: சீன ராணுவத்தினரின் அத்துமீறலையும், அவர்களின் ஆக்ரோஷமான தாக்குதல்களையும் சமாளிப்பதற்காக உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையாக கருதப்படும் க்ராவ் மகா (Krav Maga) என்ற கலையை இந்திய ராணுவத்தினர் கற்று வருகின்றனர். பாகிஸ்தானை போலவே இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நாடு சீனா. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி பிரச்சினை செய்கிறது என்றால், சீனாவோ தனது நாட்டு ராணுவ வீரர்களை அவ்வப்போது அனுப்பி நமது எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய மாநிலங்களான … Read more

ரூ.1.50 கோடியில் ராதா-கிருஷ்ணர் கோயில்… வாழ்நாள் சேமிப்பை செலவழித்து மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய கணவர்…

மத்தியப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து மனைவியின் கடைசி ஆசையான ராதா-கிருஷ்ணர் கோவிலை கட்டியுள்ளார். சத்தர்பூரைச் சேர்ந்த சன்சோரியா என்ற அந்நபரின் மனைவி 2016-ம் ஆண்டு நவம்பரில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என சன்சோரியா முடிவு செய்தார். இதற்காக தமது கையில் இருந்த சேமிப்பு பணம் ஒன்றரை கோடி ரூபாயை செலவிட்டு, கோவிலை கட்டி முடித்துள்ளார். இஸ்லாமிய கலைஞர்கள் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளை செய்துள்ளனர். 6 ஆண்டுகள் நடைபெற்ற … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய அரசு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் திறக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாதென வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் கட்சி, … Read more