டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் வெளியிடப்படும்: மத்திய இணை அமைச்சர் தகவல்

மும்பை: டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு … Read more

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு

கொல்கத்தா: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இருக்கிறது என்றும், துணைநிலை ஆளுநருக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, … Read more

ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர்..!!

கேரளாவிற்கு வந்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், நேற்று முன்தினம் (மே 21) திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று (மே 22) கண்ணூருக்கு வந்த துணைக் குடியரசுத் தலைவர், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தனது கணித ஆசிரியராக இருந்த ரத்னா நாயர் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசிப் … Read more

உ.பி சம்பவம் | மணப் பந்தலில் இருந்து ஓடிய மணமகனை 20 கி.மீ துரத்திப் பிடித்த மணப்பெண்!

பெரேலி: திருமணப் பந்தலில் இருந்து மணமகன் தப்பித்து ஓட, அவரை விடாமல் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற மணப்பெண், அவரை மண்டபத்துக்கு அழைத்து வந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞருடன் அந்தப் பெண் இரண்டரை ஆண்டு காலமாக காதலில் இருந்தார். இதனையடுத்தே இருவீட்டாரும் கலந்தாலோசித்து திருமணத் தேதியை முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறுக்கிழமையன்று பூதேஸ்வர் நாத் கோயிலில் திருமணம் நடத்துவதாக இருந்தது. ஆனால், திருமண … Read more

மனைவியை பணயம் வைத்து சூதாட்டம்… தோற்றதால் நண்பருடன் உறவு கொள்ள வற்புறுத்தல்.. பகீர் சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர்தான் இப்படி ஒரு பகீர் சம்பவத்துக்கு ஆளாகியுள்ளார். புகார் அளித்த பெண்ணுக்கு அந்த நபருடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மதுவுக்கு அடிமையான அவரது கணவர் சூதாட்டத்திலும் ஆர்வம் கொண்டவராம். தினமும் குடிக்காமலும் நண்பர்களுடன் சூதாடாமலும் வீட்டிற்கு வரமாட்டாராம் இந்த உத்தம புருஷர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல போதையுடன் வீட்டிற்கு வந்த கணவர், தனது நண்பருடன் உறவு … Read more

UPSC 2022 Final Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு… 933 பேர் தேர்ச்சி!

UPSC 2022 Final Result: மத்திய குடிமை பணித்தேர்வு 2022 முடிவுகள் இன்று வெளியான நிலையில், மொத்தம் 933 பேர் இத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முழு தகவல்களையும் இங்கு காணலாம்.

விரைவில் வருகிறது பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழ ரகம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான ஊர்ப்புற மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் திட்டமிட்டார் உபேந்திரா சிங். இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அந்த மாம்பழத்தை ஆய்வகத்தில் இருந்தவர்களும் … Read more

யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமை பணி தேர்வுகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. 2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி … Read more

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் யு.டி.காதர் வேட்புமனு தாக்கல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, அதன் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த யு.டி.காதரை … Read more

அடித்து வெளுக்க போகும் தென்மேற்கு பருவமழை.. இந்த வருஷம் தரமான சம்பவம் இருக்கு!

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழைநாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். வழக்கமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் கேராளவில் தொடங்கும். பின்னர் கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா என படிப்படியாக பெய்ய தொடங்கும்.​ Andrea: பளபளக்கும் டைட் பார்ட்டி … Read more