இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர்..!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில கவர்நர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதே போல் கர்நாடக மாநில துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் … Read more

ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அவருடைய 32-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அவரது சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே ராகுல் காந்தி, “என்னுடைய தந்தையின் … Read more

மத்திய அரசின் அவசர சட்டத்தின் மூலம் டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு

புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ)உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த … Read more

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் – சந்திரபாபு நாயுடு வரவேற்பு

விசாகப்பட்டினம்: ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 நாட்களாக விசாகப்பட்டினத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் நிறைவு நாளான வெள்ளிக்கிழமையன்று இரவு அவர் அனகாபல்லியில் மாபெரும் கூட்டத்தில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி பேசினார். அப்போது மக்கள் மத்தியில் அவர் … Read more

ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறும் அறிவிப்பு – மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: ரூ.2,000 நோட்டுகள் பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. என்று 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே கூறினோம். தற்போது நாங்கள் சொன்னது சரி என்று நிரூபித்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, அரசும், ரிசர்வ் வங்கியும் மீண்டும் ரூ.500 மற்றும் ரூ.1,000 அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 … Read more

உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 10 யோசனைகளைத் தெரிவித்தார் பிரதமர்மோடி..!

ஜப்பான் நகரான ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர்மோடி, உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பத்து யோசனைகளைத் தெரிவித்துள்ளார். உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிகளுக்கு உணவுப்பாதுகாப்புத் திட்டம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மோடி கூறினார். விவசாயிகளை மேம்படுத்துதல், உணவு வீணாவதைத் தடுத்தல், ஆரோக்கியம் காக்கும் சத்தான உணவுப் பொருட்கள், உரம் விநியோகிக்கும் மையங்களை அரசியலை விட்டு விலக்கி வைத்தல், உடல் நல பாதுகாப்புக்கான டிஜிட்டல் ஹெல்த் முறையை ஏற்படுத்துதல் போன்ற … Read more

'நார்கோ சோதனைக்கு தயார்' – மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் சிங் ரியாக்‌ஷன்

புதுடெல்லி: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நார்கோ சோதனை அல்லது பாலிகிராபி அல்லது உண்மை கண்டறிதல் சோதனைக்கு தான் தயார் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் வைத்துள்ளார் அவர். அது என்னவென்றால் மல்யுத்த விளையாட்டு வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோரும் இந்த சோதனையை எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த … Read more

‘மிக் 21’ ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்திய விமானப்படை..!

ராஜஸ்தானில் நேரிட்ட விபத்து எதிரொலியாக, ‘மிக் 21’ ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து கடந்த 8-ந் தேதி வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்ட ‘மிக் 21’ ரக விமானம், ஹனுமன்கர் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்திய விமானப் படையில் 1960-களில் இணைக்கப்பட்டதில் இருந்து, கடந்த … Read more

பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கி வரவேற்ற பப்புவா நியூ கினி பிரதமர்

பப்புவா நியூ கினி: இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்ஐபிஐசி) 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பப்புவா நியூ கினிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே காலை தொட்டு வணங்கி வரவேற்றார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி -7 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய – பசிபிக் … Read more

கர்நாடகா: 135 சீட்லாம் போதாது.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டார்கெட் கொடுத்த டிகே சிவக்குமார்.!

கர்நாடகாவில் நேற்று புதிதாக காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்துள்ளது. கடந்த மே 10ம் தேதி மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைக்காட்டிலும் அதிகமாக 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 36 சதவிகித வாக்குகளுடன் 65 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்கட்சியாக மாறியுள்ளது. இந்தசூழலில் … Read more