4 உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதித்தது ‘ஃபைசர்’ நிறுவனம்

மேக்னக்ஸ், மேக்னக்ஸ் ஃபோர்ட், ஜோஸின், மேக்னமைசின் ஆகிய 4 உயிர்காக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களுக்கு ஃபைசர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அந்த மருந்துகளைத் தயாரிக்கும்போது நேர்ந்த குறைபாடுகளால் அவற்றை நோயாளிகளுக்கு,  குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க வேண்டாம் எனவும், மருந்தகங்களில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் ஃபைசர் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னனி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஃபைசரின் இந்த மருந்துகள் குஜராத்தின் வதோதராவில் இயங்கிவரும் அஸ்ட்ரல் ஸ்டெரிடெக் நிறுவனத்தில் … Read more

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா!!

கர்நாடக ஆளுநரை சந்தித்து சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இவர்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. சித்தராமையாவும், டி.கே சிவகுமாரும் டெல்லி சென்றனர். இருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினர். இதனால் … Read more

கர்நாடகா | ஆட்சியமைக்க உரிமை கோரிய சித்தராமையா – டிகே சிவக்குமார்: இனிப்பு வழங்கிய ஆளுநர்

பெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பெங்களூருவில் உள்ள ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து இருவரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். முன்னதாக, சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் … Read more

கர்நாடகா முதல்வர் சர்ச்சை.. நீ பாதி நான் பாதி சிஎம்.. டீல் முடித்த காங்கிரஸ் தலைகள்.!

இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, மூன்றாவது முறையும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. அதேபோல் எதிர்கட்சிகளும் வியூகங்கள் அமைத்து வருகிறது. அதாவது எதிர்கட்சிகள் சொந்த கருத்து முரண்களைக் கொண்டு தனித்தனியே 2024 மக்களவை தேர்தலை சந்தித்தால் அது பாஜகவிற்கே சாதகமாக முடியும் என கூறப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் … Read more

பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று திறந்து வைப்பார்!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இதில், எதிர்காலத்திற்கான அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு | பிஹார் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து பாட்னா உயர் நீதிமன்றம் விதித்திருக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) மறுத்து விட்டது. வழக்கை ஜூலை 14-ம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி இடைக்கால தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிஹார் மாநில அரசு 11-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது. … Read more

சித்தராமையா பதவி ஏற்பில் எதிர்கட்சிகளின் சங்கமம்.. 2024 தேர்தலுக்கு முன்னோட்டம்.. மாஸ்டர் மூவ்.!

சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள 11 எதிர்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைக் காட்டிலும் அதிகமாக 135 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சித்தராமைய முதல்வராக தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவே ஆட்சியமைக்க … Read more

சந்திரயான்-3 விரைவில் விண்ணில் சீறிப் பாயும்: ISRO

நிலவின் தென்துருவம் யாரும் ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ள நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன. 

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா

சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா, பெங்களூருவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, 3 நாட்கள் இழுபறிக்குப் பின் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் … Read more

அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது இந்தியா..!

சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் … Read more