இன்னும் 24 மணிநேரம்…இந்த திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்

தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: அரசாங்கத்தின் சிறுசேமிப்பு திட்டங்களான பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்றவற்றிலும் நீங்கள் முதலீடு செய்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, அனைத்து வங்கிகளும் தங்களின் எஃப்டிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் அரசு உயர்த்தும் என்று … Read more

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து!

ஆந்திர: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களை கோயிலை விட்டு வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

லட்சத்தீவு தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது ஃபைசலின் எம்.பி. பதவி தகுதியிழப்பு ரத்து

புதுடெல்லி: லட்சத்தீவு மக்களவை தொகுதி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி இழப்பை மக்களவை செயலகம் ரத்து செய்து அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் முகமது ஃபைசல். கொலை முயற்சி வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை கவரட்டி நீதிமன்றம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்து மக்களவை செயலகம் … Read more

ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை

ஆந்திரா: ஆந்திராவில் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரகளை செய்த நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கர்னூல் மாவட்டம் பத்திகொண்டா காவல்நிலையம் அருகே ஒருவர் வெறி பிடித்தவர் போல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். அந்த வழியாக சென்ற இரண்டு பேருந்துகளை வழிமறித்த அவர் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் கண்ணாடியை உடைத்ததோடு கார் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினார். தொடர்ந்து காவல் நிலையம் சென்று அங்கிருந்த இருக்கைகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனை கண்டா சிலர் அச்சத்தில் … Read more

"மோடியை குற்றவாளியாக்க சிபிஐ எனக்கு நெருக்கடி கொடுத்தது…": அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டரில் மோடியை குற்றவாளியாக்க அவருக்கு எதிராக என்னைத் திருப்ப சிபிஐ அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், தான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் தன்னிடம் நடந்த சிபிஐ விசாரணையின் நினைவுகளைப் பகிர்ந்து … Read more

என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு

புதுச்சேரி: என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று அம்மாநில பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் பின் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமைச்சர் நமச்சிவாயம், காவலர்களுக்கு விடுமுறை, பெண் காவலர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை, ராணுவ வீரர்களுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேரவையில் பேசியஅமைச்சர் லெட்சுமி நாராயணன், புதுச்சேரி மாநிலத்தில் நிலவக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை … Read more

தேசிய கீதத்துக்கு அவமதிப்பு: மம்தாவுக்கு கருணை காட்ட மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

மும்பை: தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எந்தவிதக் கருணையும் காட்ட கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையிலுள்ள கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை் பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக எழுந்து நின்ற … Read more

அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!

டெல்லி: அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு ஒன்றிய அரசு குறிப்பிட்ட வரியை இறக்குமதி வரியாக வசூலித்து வருகிறது. இதனிடையே அறிய வகை நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 3,000-ஐ கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,509 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 3,016 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 13,509 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கரோனா தொற்று பாதிப்பு 2.7 … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்… சரிந்த பாஜக- கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வழக்கம் போல் காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அதில், காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் எனத் … Read more