கை கொடுத்த GPS.. அம்பலமான மனைவியின் திருமணத்தை மீறிய உறவு – அதிரடியில் இறங்கிய கணவன்!

தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம். இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற … Read more

''கடுமையாகப் போராட தயாராகுங்கள்'' – பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: கடுமையாகப் போராட தயாராகுங்கள் என்று பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டாம் கட்டத்தில் நடைபெறும் முதல் பாஜக நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் … Read more

Old Pension திட்டம் குறித்து மிகப்பெரிய அறிவிப்பு, உடனடியாக இதை படியுங்கள்

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இன்று பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் பேரணியில் ஈடுபடவுள்ளனர். அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்றால், அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பேரணியில் கலந்து கொள்வார்கள் … Read more

திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடக்கம்: பக்தர்கள் அவதி

திருமலை: திருப்பதி தேவஸ்தான இணையதளம் திடீரென முடங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விரைவில் இணையதள பழுது சரிசெய்யப்பட்டு செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பழுது பார்க்கப்பட்டு அமெரிக்கா திரும்பிய 'மேத்யூ பெர்ரி' போர் கப்பல்!

அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி இந்தியாவில் சென்னைக்கு அருகே பழுதுபார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது. அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11 முதல் மார்ச் 27, 2023 வரையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை வெற்றிகரமாக … Read more

"ராகுல் காந்தி பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்" – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், மக்கள் பிரதமர் பக்கம் இருப்பதால் ராகுல் காந்தியால் அதில் வெற்றி பெற முடியாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2019-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ராகுல் காந்தி, பிரதமரின் மிகப்பெரிய பலமே அவர் மீது இருக்கும் ‘இமேஜ்’ தான், அதை நான் கிழித்தெறிவேன் … Read more

புதிய நெருக்கடி: அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்கு விலை கடும் சரிவு..!!

மும்பை: அதானி குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. விலை சரிந்து கொண்டிருக்கும் அதானி குழும பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்ததாக சர்ச்சை எழுந்தது. அதானி நிறுவனப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு இழப்பு என புகார் தெரிவிக்கப்பட்டது. அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள இ.பி.எஃப். தொகையைத் திரும்ப பெறுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி … Read more

இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை 200 எம்.பி., எம்எல்ஏ.க்கள் தகுதி இழந்துள்ளனர்

புதுடெல்லி: இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை, பல்வேறு காரணங்களுக்காக 200 எம்.பி., எம்.எல்ஏக்கள் தகுதி இழந்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் அரசியல் சாசன சட்டப்படி, ராகுல் காந்திக்கு நீதிமன்றம்தான் … Read more

பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் 11-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

டெல்லி: தொடர்ந்து 11-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி … Read more