“நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” – எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

புதுடெல்லி: “நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” என்று எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ”இந்தியாவின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். அதற்காக எந்த ஒரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள … Read more

ஒன்று சேர்ந்த 14 மாநில எதிர்கட்சிகள்; பாஜகவிற்கு பெருத்த அடி.!

மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் போன்ற அமைப்புகள் பாஜகவின் எதிர்ப்பாளர்களை மட்டுமே குறிவைத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவில் இணைந்தவுடன் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுவதாகவும் அல்லது புதைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, புலனாய்வு … Read more

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

நியூடெல்லி: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியானதுமே, அவரது தண்டனையை நிறுத்தி வைக்க காங்கிரஸ் தனது சட்டப்போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த நடவடிக்கை பாஜகவின் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தெரிவித்தார். அதானி விவகாரம் வெளியானதில் இருந்து அந்த குழுமம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் … Read more

2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதி நீக்கம் – மக்களவை செயலகம் அறிவிப்பு..!

பிரதமர் குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு, சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102 (1) e-ன் படி, இரண்டாண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதன்படி, வயநாடு தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி, தீர்ப்பு வெளியான நேற்றைய தேதியிலிருந்து … Read more

திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்

டெல்லி: திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது என்று மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார். ராகுல் தகுதி நீக்கம் நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கப் புள்ளி இது. நாட்டின் அரசமைப்புகள் அனைத்தும் அழுத்தத்தில் உள்ளன என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

ராகுல் காந்தி தகுதி நீக்கம்… மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு!!

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை. … Read more

எம்.பி பதவி பறிப்பு: ராகுல் காந்திக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பின் பின்னணி: கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று … Read more

ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கம்; அடுத்து அவர் என்ன செய்வார்.?

ராகுல் காந்தி தகுதி நீக்கம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் 2019 அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்தது. சூரத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், லோக்சபா செயலகம், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து, அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்தது. அந்த இடத்திற்கான சிறப்புத் தேர்தலை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் … Read more

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை! வைகோ கண்டனம்!

மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும். இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற … Read more